சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் ஜனவரி 2ஆம் நாள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 2024ஆம் ஆண்டு இறுதி வரை, ஹாங்காங்கிலுள்ள பெருநிலப்பகுதி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்க ளின் மொத்த எண்ணிக் கையும், புதிதாக நிறுவப் பட்ட ஹாங்காங் உள்ளூர் நிறுவனங்களின் எண் ணிக்கையும் புதிய சாதனையைப் பெற்றன. பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஹாங்காங்கில் முதலீடு செய்து தொழில் புரிவதையும், ஹாங்காங் வளர்ச்சி மற்றும் “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கை விளைவிக்கும் நலன்களைக் கூட்டாகப் பகிர்ந்து கொள்வதையும் வரவேற்கிறோம் என்றார். 2024ஆம் ஆண்டு, ஒன்றிய அரசின் பெரும் ஆதரவுடன், ஹாங்காங் சிறப்பு நிர்வாக அரசு பயன் தரும் முறையில் முயற்சிகளை மேற்கொண்டு, பொருளாதார வளர்ச்சியை நாடி, வெளிநாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை அதிகரித்து, ஹாங்காங்கின் நிதானமான வளர்ச்சியை வலுப்படுத்தி வருகிறது. ஆண்டு முழுவதிலும் ஹாங்காங்கில் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை எட்டியது. இது 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.