articles

img

சிறு, குறு தொழில் காப்பதே தமிழக வளர்ச்சி!

சிபிஐ(எம்) 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை குறித்த தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.  சிறு, குறு தொழில் துறை தேசிய மொத்த உற்பத்தி யில் 8 சதவீதம், உற்பத்தித் திறனில் 45 சதவீதமும் மற்றும் ஏற்றுமதியில் 40 சதவீதமும் பங்களிப்பு செலுத்து கின்றனர். சிறு, குறு, நடுத்தரத் தொழில் வளர்ச்சியில் 15 சத வீதம் என்னும் அளவில் தமிழகம் முன்னணி பங்கு வகிக்கிறது. இதன் மூலம் 32 ஆயிரம் கோடி முதலீட்டில் 8 ஆயிரம் வகையான பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விவசாயம், கட்டுமானத்திற்கு அடுத்தபடியாக குறைந்த முதலீட்டில் அதிக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.

தமிழகத்தின் பன்முகத் தொழில் வளர்ச்சி

தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல், இன்ஜினியரிங், உணவு பதப்படுத்துதல், தோல் தொழிற்சாலை, நூற்பாலை, விசைத்தறி, பின்னலாடை, கைத்தறி உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை, காகித உற்பத்தி, பிளாஸ்டிக் பொருட்கள், மின்சார உற்பத்தி, மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தி என பல்வேறு வகைப்பட்ட தொழில்கள் நடை பெற்று வருகின்றன. சற்றேறக்குறைய பல லட்சம் சிறு, குறு தொழில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் நேர டியாகவும், மறைமுகமாகவும் 2 கோடி பேர் வரை வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

நெருக்கடியில் சிறு தொழில்கள்

ஒன்றிய அரசின் பண மதிப்பு நீக்கம், அவசரக் கோலத்தில் அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, ஜாப் ஒர்க்குக்கு அநீதியாக விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. கொரோனா பொது முடக்கம் ஆகியவற்றால் சிறு, குறு நடுத்தரத் தொழில் துறையும் நிலைகுலைந்து உள்ளது.  ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு நிதிக் கொள்கை யால், பணவீக்கம் அதிகரித்து, தொழில் துறைக்கு தேவை யான மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களின் கடு மையான விலை உயர்வு, சிறு, குறு தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலப்பொருட்கள் விலை உயர்வு

ஒன்றிய அரசின் இறக்குமதிக் கொள்கையாலும், இறக்குமதி வரி அதிகரிப்பாலும் மூலப்பொருட்களின் விலை நிலையற்றதாக ஆகிவிட்டது. ஒன்றிய அரசி னுடைய நிதி ஆயோக்கின் தொடர்ச்சியான நிர்ப்பந்தத் தின் காரணமாக தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது தொழில் துறையினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய கார ணங்களால் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு  குறைந்து போய், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் குறைந்து சிறுதொழிலே முடங்கக்கூடிய நிலைமை இருந்து வருகிறது.

முக்கிய கோரிக்கைகள்

V தமிழ்நாடு அரசு தொழில்துறை வளர்ச்சிக்காக நேரடி அந்நிய முதலீடுகளை வரவேற்கும் அதேசமயம், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரின் கோரிக்கைகளை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றித் தர வேண்டும். V தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வையும் நிலைக்கட்ட ணத்தையும் கைவிட வேண்டும். V ஒன்றிய அரசு தொழில் அபிவிருத்திக்காக கடன் கோருப வர்களுக்கு தற்போது விதிக்கப்படும் கடுமையான கட்டுப் பாடுகளை முற்றாகக் கைவிடுவதோடு, சிறு, குறு உற்பத்தியா ளர்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் வழங்கப்படுவதை முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். V ஜிஎஸ்டி வரி வசூல் என்ற பெயரில் அந்தத் துறையினர் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரிடம் மேற்கொள்ளும் அப ராதம், அதீத வசூல் உள்ளிட்ட அத்துமீறல்களை கைவிட வேண்டும். V ஒன்றிய அரசு சிறு, குறு தொழில் சார்ந்த ஜாப்ஒர்க்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அநீதியான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது. இத்தீர்மானத்தை மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்ம நாபன் முன்மொழிய, மாநிலக் குழு உறுப்பினர்  ஆர்.ராஜா வழிமொழிந்தார்.