மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது ஜன. 3 துவங்கி 5 வரை விழுப் புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு, மாநில செயற் குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலுமிருந்து 550-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் மக்கள் நலனுக்கான கோரிக்கை களை முன்வைத்து பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புத் திட்டத்தின் நோக்கங்களை குலைக்காமல் செம்மையாக செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மா னத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ. அமிர்த லிங்கம் முன்மொழிய, தமிழ்ச்செல்வி (தஞ்சாவூர்) வழிமொழிந்தார். அந்த தீர்மானம் வருமாறு:
நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கிய ஒன்றிய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்புத் திட்டமானது, 2005-ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது இடதுசாரிகளின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்டு, கடந்த 20 ஆண்டுக ளாக நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் தொடக்ககாலம் வரை ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் இரண்டு சதவீதத்திற்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை ஒழிக்கும் நோக்கத்தில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக் காலத்தில் திட்டத்தைப் படிப்படியாக சிதைத்து, நிதி ஒதுக்கீடு வெட்டிச் சுருக்கி 1.64 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வஞ்சகத்துடன் பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைப்பு
மேலும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற வஞ்சக நோக்கத்துடன், ஆதார் எண் இணைப்பு இல்லாத தொழிலாளர்களை செயல்படாதவர்கள் என பட்டியல் தயாரித்து, வேலை அட்டை பெற்ற 25 கோடி பயனாளிகளின் எண்ணிக்கை யை ஏறக்குறைய சரிபாதியாக (13 கோடியாக) பாஜக அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 93 லட்சத்தி லிருந்து சுமார் 80 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. சாதி ரீதியான வேலை, சாதி ரீதியான சம்பளம் என ஊரக வேலைத் திட்டத்தின் பயனாளிகளான உழைக் கும் மக்களை மோதவிடும் முயற்சியையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.
நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளுக்குத் தடை
அதுமட்டுமல்லாமல், அதிகமான தொழிலாளர்க ளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய- நீர் நிலைகள் தூர் வாரும் பணிகளை தடை செய்யப் பட்ட பணிகளாகவும், இதனையும் மீறி வேலை வழங்கும் பட்சத்தில் அதற்குரிய கூலித் தொகை யினை கண்டிப்பாக வழங்க இயலாது எனவும் மாநில அரசுகளை ஒன்றிய அரசு மிரட்டுகிறது. இதனால் நாடு முழுவதும் வேலை குறைக்கப் பட்டு, ஒவ்வொரு பணிகளும் 5 முதல் 10 தொழி லாளர்களுக்கு மட்டுமே வேலை அளிக்கும் வகையில் மாற்றப்பட்டு வருவதால், இத்திட்டம் பின்னடைவை யும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பையும், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஊரக வேலையுறுதித் திட்டத்தை பல்வேறு வகைகளில் சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசை 24-ஆவது மாநில மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
மாநில அரசின் முயற்சி பாராட்டத்தக்கது
தமிழ்நாட்டில், ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்புத் தொகையை தொ டர்ச்சியாக உயர்த்தும் மாநில அரசின் முயற்சி பாராட் டத்தக்கது. இருப்பினும் திட்டத்தை செயல்படுத்தும் முழுமையான பொறுப்பு மாநில அரசை சார்ந்தது என்ற அடிப்படையில், இன்னும் கூடுதலான, ஆக்கப் பூர்வமான தலையீட்டை மாநில மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக முழுமையாக வேலை, கூலி கிடைக்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம், வேலை அளவு தீர்மானிக்க வேண்டும். ஜியோ டெக் காலவரம்பை 8 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு களாக அதிகரிக்க வேண்டும். வேலையில்லாக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தொலைதூரப் பகுதிக்கு வேலைக்குச் செல்லும் பயனாளிகளுக்கு பயணப்படியை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
கட்டுமானப் பணிகளைத் தவிர்க்க வேண்டும்
சட்டத்திற்குப் புறம்பாக இயந்திரப் பயன்பாட் டிற்கும், ஒப்பந்தக்காரர்களின் தலையீட்டிற்கும் வழி வகுக்கும் கட்டுமானப் பணிகளை தேர்வு செய்து செயல் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். செலவிடும் தொகையில் 60 சதவிகிதம் ஊதியத்திற்கும், 40 சதவிகிதம் பொருட்களுக்கும் என்ற விகிதாச்சாரம் கறாராக கடைப்பிடிக்கப்பட வேண்டும். விவசாயம் முழுமையாக இயந்திரமயம் ஆக்கப் பட்டுள்ளதால் கிராமப்புற விவசாயத் தொழிலாளர் கள், சிறு, குறு விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் பிரிவினர் வேலையின்மைக்கும், பெரும் வருமான இழப்பிற்கும் உள்ளாகியுள்ளனர். பல மடங்கு உயர்ந்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அவர்களின் வாழ்க்கையை நசுக்குகிறது.
நிதி ஒதுக்கீட்டை ரூ.4 லட்சம் கோடியாக உயர்த்துக!
கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கை களை கடைப்பிடித்து அவர்களுக்கு பல லட்சம் கோடியைத் தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டத்திலும், வறுமை மற்றும் நுண் நிறுவனக் கடன் பிடியிலும் தவிக்கும் கிராமப்புற ஏழைகளுக்கு வேலை அளிக்கும் ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கு குறைந்தபட்சம் 4 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திட வேண்டும். தினக்கூலியை 600 ரூபாயாக வும், வேலை நாட்களை 200 நாட்களாகவும் உயர்த்திட வேண்டும். கிராமப்புற தன்மை கொண்ட பேரூ ராட்சி பகுதிகளுக்கும் வேலையுறுதித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டுமென ஒன்றிய அரசை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.