articles

img

அரசு ஊழியர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், கல்லூரி- பள்ளி ஆசிரியர்கள் நலனுக்கான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன் வாடி ஊழியர், கல்லூரி, பள்ளி ஆசி ரியர்களின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென சிபிஐ(எம்) மாநில மாநாடு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தீர்மானம் வருமாறு: அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், ஆசிரி யர்களின் நலன்கள், கோரிக்கைகள் கடந்த கால அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சூழலில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழும் போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தரப்பட்டது. 

நிர்வாகத் தீர்ப்பாயம்,  காலமுறை ஊதியம்...

மிக முக்கியமானதாக வரையறுக்கப்பட்ட பயன்கொண்ட பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படும் என்ற அறிவிப்பு அமைந்தது. மேலும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களுக்கான நிர்வாக தீர்ப்பாயம் அமைப்பது, ரூ.8000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17 பி நடவடிக்கைகளை திரும்பப் பெற்று நிவாரணம் வழங்குவது, சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணி அமர்த்தி காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் பணிக்கொடை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் எண் 308 லிருந்து 318 வரை இடம் பெற்று இருந்தன. 

பழைய பென்சன் திட்டம் மீட்காததால் அதிருப்தி

01.04.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு எவ்வித வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய பயனுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவதாக அறி வித்து அமலாக்கத்தை துவங்கியுள்ளன. ஆனால் இந்த மாநிலங்கள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் செலுத்திய தொகையை திரும்பத் தராது என்று ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசோ ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் அங்கமாக மாறாத சூழ லிலும் பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படுவது என்ற கோரிக்கையை ஏற்பது என்பதை நோக்கி நகரவே இல்லை. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை, கோபத்தை உரு வாக்கியுள்ளது.  தமிழ்நாட்டின் சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. 2021 தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதியம் ஒழிக்கப் பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் 40 ஆண்டு காலமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களின் இக்கோரிக்கை கூட ஈடேறாத நிலையில் காலைச் சிற்றுண்டியை தனியார் முக மைக்கு வழங்கப்பட்ட முடிவு  எதிர் மாறானதாகும்.  தமிழ்நாட்டில் ஒன்றிய முன்னுரிமையோடு இருந்த ஆசிரியர்கள் இடமாற்றல்கள் மாநில அள விலான முன்னுரிமை முறைமைக்கு மாறுவதற்கான அரசாணை எண் 243/ 21.12.2023 கடுமையாக ஆசிரியர் நலனையும் குறிப்பாக பெண் ஆசிரி யர்களை பாதித்துள்ளது. கல்வித் தரத்தையும் பாதிப்ப தாக உள்ளது. 

23 ஆண்டுகளாக  பதவி உயர்வில்லா நிலை

23 ஆண்டுகளாக எந்த பதவி உயர்வும் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரி யர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை நிறை வேற்றப்படவில்லை.  பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு கல்லூரிக ளாக மாற்ற வேண்டும், எல்லா பல்கலைக்கழகங்களின் சம்பளம் மற்றும் நிர்வாகத்திற்காக நிதியளிப்பு வழங்கப்பட வேண்டும். பல்கலைக் கழகங்களிலும், அதேபோல கல்லூரி கல்வி இயக்குனரகம் போன்ற முகமைகளிலும் காலியாக உள்ள முக்கியமான பதவிகள் விரைந்து நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளிலும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. 

நிரப்பப்படாத 5 லட்சம்  காலிப் பணியிடங்கள்

தமிழ்நாட்டில் 64.24 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் அரசு ஊழியர் ஆசிரியர் பணிகளில் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 2024 இல் 75,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒப்பந்தப் பணிகள், பகுதி நேர ஊழியம், வெளி முகமைகளிடம் பணி ஒப்படைப்பு வாயிலாக நிரந்தரப் பணியிடங்கள் மீதான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. உழைப்புச் சுரண்டலும் நடத்தப்படுகிறது.  வெளி முகமை மூலமாக மருத்துவத்துறை, நில அளவைத்துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் அரசாணை எண் 10, 34, 115, 152 போன்றவை மூலமாக நிய மனங்கள் மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் அரசாணை எண் 95-இன் படி 8997 சமையல் உதவி யாளர்களை ரூ.3000 தொகுப்பூதியத்தில் பணி நிய மனம் செய்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஇ அதிமுக ஆட்சியில் பழி வாங்கப்பட்ட சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரை முறைப்படுத்த வேண்டும்.

நிரந்தரப் பணி நியமனம்...

தமிழ்நாடு முழுவதும் 4500 க்கு மேற்பட்ட தலை மையாசிரியர் பணியிடங்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டி உள்ளது. இவற்றை காலமுறை ஊதியத்தில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. பதவி உயர்வுகளுக்கு தகுதித் தேர்வு என்ற பிரச்சனையில் உச்சநீதிமன்ற வழக் கினை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து ஆசிரியர்க ளின் பதவி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டி உள்ளது.  பள்ளி நிர்வாகக் குழு நியமனங்கள் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் பகுதி நேர ஆசிரியர் நியம னங்கள் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுப்பதை முடிவுக்கு கொண்டு வந்து நிரந்தரப் பணி நியமனங்க ளுக்கு வழிகோல வேண்டும். அரசு கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ பேராசிரியர்களின் பணி வரை முறைப்படுத்தப்பட வேண்டும். 

தமிழக கல்விக் கொள்கையை அமலாக்க வேண்டும்

கல்வித்துறையை பொறுத்தவரையில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ பல்வேறு பெயர்களில் மறை முகமாக செயல்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழக அரசால் தமிழகத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி குழுவின் பரிந்துரை இன்னும் அமலாக் கப்படவில்லை. அதன் அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்து ணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக  அரசுக்கு 2021 இல் தந்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டிய கடமை உள்ளது. கடந்த மூன்றரை  ஆண்டு காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் அரசு ஊழியர், ஆசிரியர்களின், சத்துணவு ஊழியர்களின் சங்கங்களை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என விழுப்புரத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில 24ஆவது மாநாடு கேட்டுக்கொள்கிறது. இந்த தீர்மானத்தை க.சுவாமிநாதன் முன்மொ ழிய, ஜெயராமன் (கிருஷ்ணகிரி) வழிமொழிந்தார்.