tamilnadu

img

திருவள்ளூரில் எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து!

திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது
திருவள்ளூர் அருகே 27,000 லிட்டர் டீசலுடன் சென்ற சரக்கு ரயிலில் இன்று விடியற்காலை 5 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயினை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. 
பிறகு 6 மணி நேரத்திற்கு பிறகு 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் மதியம் 1 மணிக்குள்ளாக தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தது.
அதன்பின் 7 மணி நேரத்திற்குப் பின் தீயினை தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.