tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அரசு மருத்துவமனையிலுள்ள கழிவறையை பயன்படுத்த கட்டணம்

நாமக்கல், ஜூலை 12- நாமக்கல் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை வாளகத்தி லுள்ள கழிவறையை பயன்படுத்துவ தற்கு கட்டணம் விதிக்கப்படுவதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாணவர் சங்கத் தின் நாமக்கல் மாவட்டக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் விபத்து, அவசர சிகிச்சை மற்றும் புற நோயாளிகள் பிரிவு என  பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனை உள் வளாகத்தி லேயே இலவச கழிவறைகள் இருந் தும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் வரும்பொழுது கட்டாய கட்டண வசூல் மையமாக, நாமக்கல் மாநக ராட்சி சார்பில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் கட்டணம் (ரூ.10) வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிக ளும், ஆயிரக்கணக்கான பொதுமக் களும் வந்து செல்லக்கூடிய பெரிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யாக உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்திற்குள் நோயாளிகள் பயன் பாட்டிற்கென அந்தந்த வார்டுகளில் கழிவறை உள்ளது. அதேசமயம் வளாகத்திற்குள் காவல் நிலையம் மற்றும் பிணவறை, இதற்கிடையில் கட்டண கழிப்பறை இயங்கி வருகி றது. எனவே மாவட்ட நிர்வாகமும் மருத்துவமனை நிர்வாகமும் உடன டியாக இந்த கட்டண கழிப்பிடத்தை பொது கழிப்பிடமாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும், அரசு மருத்துவம னைகளில் அரசு சார்பில் இலவச உணவகம் அமைத்தால் மருத்துவம னைக்கு வரக்கூடிய ஆயிரக்கணக் கான ஏழை, எளிய மக்களுக்கு பய னுள்ளதாக இருக்கும். எனவே, தமி ழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் இலவச உணவகம் திறக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்து ஏற்படுவதை தடுக்க வலியுறுத்தல்

நாமக்கல், ஜூலை 12- திருச்செங்கோடு ரவுண்டானா பகு தியில் சாலை விபத்து ஏற்படுவதை நெடுஞ்சாலைத்துறையினர் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி யுள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு, மேட்டுப்பாளையம் மாதா கோவில் அருகே சங்ககிரியில் இருந்து ராசிபுரம் ரோட்டை இணைக்கும் வகை யில், புதியதாக சாலை அமைக்கப்பட் டுள்ளது. ராசிபுரம் சாலையில் தொடங்கி ஈரோடு சாலையில் தோக்கவாடி வரை புதியதாக புறவழிச்சாலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டு சாலைக ளும் சந்திக்கும் இடமான மேட்டுப்பா ளையம் மாதா கோவில் பகுதியில், பெரிய அளவில் ரவுண்டானா அமைக் கப்பட்டுள்ளது. சாலையிலிருந்து சில அடி உயரமே அமைக்கப்பட்டுள்ள இந்த ரவுண்டானா, தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. மேலும், ரவுண்டானா இருப்பதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், பிர திபலிப்பான்கள் எதுவும் இல்லை. ராசி புரம் சாலை, திருச்செங்கோடு சாலை, சங்ககிரி சாலை, நாமக்கல் சாலை என ரவுண்டானாவில் சந்திக்கும் நான்கு ரோடு பகுதிகளிலும் எச்சரிக்கை பல கைகள் அமைக்கப்படவில்லை. இப் பகுதியில் சாலை சரிவாக இருப்பதால், வாகனங்கள் வேகமாக வருகின்றன. அருகே வரும்போதுதான் ரவுண்டானா தெரிவதால், ஓட்டுநர்கள் தடுமாறுகின்ற னர். சில நேரங்களில் தரையோடு தரை யாக இருக்கும் ரவுண்டானா சுவரில் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே,  இப்பகுதியில் விபத்துகளை தடுக்க பிர திபலிப்பான்கள், ஒளிரும் போர்டுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.

சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி நாமக்கல், ஜூலை 12- திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக, சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டி கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த சில  தினங்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து  வருகிறது. கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து  வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்கள் குளிர்ச்சியாக காணப்படுகிறது. இந்நிலை யில், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி லும் ஏராளமான வணிக நிறுவனங்கள் பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை பல்வகையான பொருட்களை விற் பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளது. ஒவ்வொரு முறை யும் மழை பெய்யும் சமயத்தில், இச்சாலை பகுதி முழுவதும் தாழ்வான நிலையில் இருப்பதால், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை முழுதாக மழை பெய்தாலே முழங்கால் அளவிற்கு மேலாக நீர் நிரம்பிக் காணப்படுகிறது. இதன் கார ணமாக ஒவ்வொரு முறையும் பொதுமக்களும், வியாபாரி களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால், போர்க்கால அடிப்படையில் சாக்கடை கால்வாய்களை முறையாக நக ராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும். மழைநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், வெள்ளி யன்று திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேண் பாபு அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். கழிவுநீர் கால்வா யில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ் டிக் பைகள், இறைச்சிக் கழிவுகள், தெர்மாகோல் போன்றவை  மூட்டை மூட்டையாக அதிகளவில் கொட்டப்பட்டு இருந்த தால், அனைத்து கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் அதிகளவு சாலையில் தேங்கி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் அடைப்புகளை நீக்கும் பணி நடைபெற்றது. பொதுமக்கள் யாரும் சாக்கடையில் குப்பைகளை கொட்ட வேண்டாம். குப்பைகளை அந்தந்த பகுதிக்கு வந்து சேகரிக்கும் தூய் மைப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். வணிகர்கள் தேவையற்ற பொருட்களை சாக்கடைகளில் கொட்ட வேண் டாம். இந்த வேண்டுகோளை ஏற்காமல் குப்பைகளை யாரா வது சாக்கடையில் கொட்டுவதை அறிந்தால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.[