tamilnadu

img

வாலிபரை கொன்று கூவத்தில் வீசிய பவன் கல்யாண் கட்சி பிரமுகர் கைது

வாலிபரை கொன்று கூவத்தில் வீசிய
பவன் கல்யாண் கட்சி பிரமுகர் கைது

சென்னை, ஜூலை 12- எம்எல்ஏவுடன் உள்ள கள்ளத்தொடர்பை வீடியோ எடுத்ததால் வாலிபரை திருப்பதி யில் கொலை செய்து சென்னை ஏழு கிணறு பேசின்பாலம் கூவம் ஆற்றில் சடலத்தை வீசிய 5 பேரை சென்னை காவல் துறையினர் செய்தனர். சென்னை ஏழுகிணறு பேசின் பாலம் கூவம் ஆற்றின் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக கடந்த 8ஆம் தேதி ஏழுகிணறு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறை யினர் சம்பவ இடத்துக்கு சென்று, வாலி பரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கொலை செய்த உடலை ஒருவர் கூவத்தில் வீசி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவரின் பையில் இருந்த துண்டு சீட்டை எடுத்து பார்த்தபோது, திருப்பதியை சேர்ந்த சீனிவாசலு என தெரிய வந்தது. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் கொலை என்பதால் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து ஆணையர் அருண் உத்தரவிட்டார். தனிப்படை காவல் துறையினர், அவரது செல்போனுக்கு யாரெல்லாம் தொடர்பு கொண்டனர் என்பது குறித்தும், கண்காணிப்பு கேமராவில் பதிவான வாகனம் மற்றும் அதில் வந்தவர்கள் குறித்தும் விசாரணை செய்ததில் ஆந்திராவைச் சேர்ந்த சந்திரபாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து நடத்திய தீவிர விசாரணையில், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவைச் சேர்ந்தவர் பெனிட்டா கோட்டா (35). இவர் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ளார். இவருக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜன சேனா கட்சியின் எம்எல்ஏ ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை சீனி வாசலு வீடியோ எடுத்துள்ளார். இதை எம்எல்ஏவும், பெனிட்டாவும் பார்த்து விட்டனர். அவர்கள் சீனிவாசலுவை மிரட்டி வீடியோவை கேட்டபோது அவர் கொடுக்கவில்லை என்றும், அவர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெனிட்டா, இது குறித்து தனது கணவர் சந்திரபாபுவிடம் கூறியுள்ளார். பின்னர் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தன்னிடம் வேலை செய்யும் சிவக்குமார், கோபி, தாசர் ஆகியோர் மூலம் சீனிவாசலுவை வரவழைத்து தாக்கி கொலை செய்துள்ளனர். பிணத்தை ஆந்திராவில் போட்டால் மாட்டிக் கொள்வோம். தங்களது அரசியல் வாழ்க்கை அழிந்துவிடும் என்று கருதியவர்கள், சீனிவாசலுவின் உடலை சென்னைக்கு எடுத்து வந்து கூவத்தில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து  ஜனசேனா கட்சியின் மாவட்டத் தலைவர் பெனிட்டா அவரது கணவர் சந்திரபாபு, ஊழியர்கள் சிவக்குமார், கோபி, தாசர் ஆகிய 5 பேரை வெள்ளிக்கிழமை இரவு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா சென்று கைது செய்தனர். தனிப்படை காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளி களை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை, காவல் ஆணையர் அருண் அழைத்து பாராட்டினார்.