tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

அடையாறு ஆற்றுப்பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம்  மனு

குன்றத்தூர்,ஜூலை 12- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரத்தில் அடையாறு ஆற்றுப்பகுதியில் பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நலமன்ற கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.சந்தானகிருஷ்ணன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு வருமாறு:    a காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பு வரதராஜபுரத்தில் அடையாறு ஆற்றுப்பகுதியில் கீழ்க்கண்ட பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அடையாறு ஆற்றை உடனடியாக தூர்வார வேண்டும். மேலும், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அடையாறு ஆற்றில் ஆகாயத்தாமரை அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கிறது. இவற்றை உடனடியாக  அகற்ற வேண்டும். அகற்றினால் தான் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக இருக்கும். 2023ம் ஆண்டு  கரை உடைந்த சில பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் (சுநவயin றுயடட) கட்டப்படவில்லை. அப்படிப்பட்ட இடங்களில் கரை உடையும் அபாயம் இருக்கிறது. எனவே, உடனடியாக தடுப்புச் சுவர்கள் கட்டப்பட வேண்டும். அப்படிப்பட்ட இடங்களில் கரையை உயர்த்துவதுடன் கரையை பலப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். வெள்ள காலங்களில் ஆற்றில் ஆகாயத்தாமரை, செடி, கொடி, மரம், இன்ன பிற பொருட்களும் வெள்ளத்தில் அடித்து வரப்படுகின்றன. அப்படிப்பட்ட நேரங்களில் அவற்றை உட னுக்குடன் அகற்ற வேண்டும். எனவே, வடகிழக்கு பருவமழை காலத்தில் வரத ராஜபுரத்திற்கென்று தனியாக ஒரு பொக்லைனை தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும், வெள்ளத் தடுப்புக்கு மணல் மூட்டைகளையும் தயாராக வைத்தி ருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்ட பணிகளை வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு நிறை வேற்றிட கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஜூலை 15,17ல்  25 மின்சார ரயில்கள் ரத்து 

சென்னை, ஜூலை 12-  கும்மிடிப்பூண்டி - பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே வருகிற 15 மற்றும் 17-ந்தேதிகளில் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பாதை சீரமைப்பு  பணிகள் நடைபெற உள்ளது.  இதையொட்டி அந்த 2 நாட்களிலும் 6 மணி நேரத்துக்கு சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 25 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 மணிக்கு சூலூல்பேட்டைக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சூலூர்பேட்டை - நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 8.35 மணிக்கு செல்லும் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40, 12.40 மணிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதி காலை 4.25 மணிக்கு செல்லும் ரயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10, 9.55, மதியம் 12, 1, 2.30 மணிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சூலூர்பேட்டையில் இருந்து சென்ட்ர லுக்கு காலை 10, 11.45, மதியம் 12.35, 1.15 மணிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.25 மணிக்கு செல்லும் ரயில்கள், நெல்லூரில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 10.20 மணிக்கு செல்லும் ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரை வரையிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட உள்ளன. இந்த தகவலை சென்னை ரயில் கோட்டம் தெரி வித்து உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்ட்ர லில் இருந்து மீஞ்சூருக்கு காலை 9.40, 11.35 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து எண்ணூருக்கு காலை 10.30 மணிக்கும், சென்னை கடற்கரை யில் இருந்து மீஞ்சூருக்கு மதியம் 12.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 9.27, 10.13 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 11.13 மணிக்கும், மீஞ்சூரில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 11.56, மதியம் 1.43, 2.59 மணிக்கும், எண்ணூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 12.43 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் மழை!

சென்னை, ஜூலை 12 சென்னை, புறநகரில் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் கடும் வெயில் பதிவாகி வருகிறது. இந்நிலையில்,  இந்நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே வெயில் அதிகமாக இருந்தது. வேலை நிமித்த மாக வெளியில் வந்தவர்கள், வெயில் தாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர். இதனிடையே, வெப்பத்தை தணிக்கும் வகையில்  மாலை சுமார் 6.15 மணி அளவில் சென்னை, புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து, திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.