மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல், ஜூலை 12- பள்ளிபாளையம் அருகே ஆபத்தான முறையில் மருத்துவக்கழிவுகள் கொட் டப்பட்டுள்ளது குறித்து தீக் கதிர் நாளிதழில் செய்தி வெளி யான நிலையில், சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம், பள் ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட வாய்க் கால் கரையோரம், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆபத்தான முறையில் ஆயிரக்கணக்கான ஊசிகள், சிரஞ்சுகள், எச்ஐவி பரிசோதனைக் குட்படுத்தப்பட்ட ரத்த மாதிரிகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகளை சிலர் கொட்டிச் சென்றுள்ளனர். இச்சாலை வழியே பள்ளிக்கு சென்று வரும் சிறு வயது குழந்தைகள் ஊசி, சிரஞ்சுகளை கையில் எடுத்து விளையாடி வருவதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளியன்று தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வட்டார மருத்துவ அதி காரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண் டனர். மருத்துவக்கழிவு மாதிரிகளை சோதனை செய்ததில், அவை பள்ளி பாளையத்தில் செயல்படும் தனியார் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் இருந்து மொத்த மாக கொண்டு வரப்பட்டு கொட்டப் பட்டுள்ளது என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் அந்த மருத்துவக்கழிவுகளை பத்திரமாக அப்புறப்படுத்தி, அப்பகுதியை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட ரத்த பரிசோதனை நிலையம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.