வைரவிழா ஆண்டு சிறப்பூதியம் வழங்கக் கோரிக்கை மின்வாரிய ஓய்வு பெற்றோர் கோரிக்கை
கோவை, ஜூலை 12- வைரவிழா ஆண்டு சிறப்பூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு 20 ஆவது ஆண்டு கிளை பேரவைக் கூட்டம் சனியன்று கோவை பூ மார்க்கெட் பகுதி அருகே உள்ள தனியார் அரங்கில் கே.மாத வன் தலைமையில் நடைபெற்றது. தலைவர் எம்.ஞானப்பிரகா சம் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஆர்.ஆர்.சுந்தரேசன் துவக்கவுரையாற்றினார். கோவை மாவட்டச் செயலாளர் பி. விவேகானந்தன், வேலை அறிக்கையும் பொருளாளர் கே. ராமச்சந்திரன் வரவு செலவு அறிக்கையும் முன்வைத்தனர். இதில், மாநில துணைத்தலைவர் என். சின்னசாமி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டலச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட சகோதர சங்கங்களின் நிர் வாகிகள் வாழ்த்திப் பேசினர். இதில், ஓய்வு பெற்ற மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு வைர விழா ஆண்டு சிறப்பூதியம் வழங்க வேண்டும். மின்வாரிய காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இப்பேரவையில், தலைவராக எம். ஞானபிரகாசம், செய லாளராக ஆர்.செபாஸ்டின், பொருளாளராக ஜே.கனக முத்து மற்றும் 29 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.ஜெய பாண்டி நிறைவுரையாற்றினார். முடிவில், ஆர்.செபாஸ் டின் நன்றி கூறினார்.