tamilnadu

img

கோவை செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம், ஜூலை 12- பொறியியல் பணிகள் நடைபெற உள்ள தால், கோவை செல்லும் ரயில்கள் பகுதி யாக ரத்து செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், பொறியியல் பராமரிப்புப் பணிகள் கார ணமாக மதுரையிலிருந்து ஜூலை 14, 16, 18  மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை 7.05  மணிக்கு புறப்படும் மதுரை - கோவை விரைவு  ரயில் (எண்: 16722) மதுரை - பொள்ளாச்சி இடையே மட்டும் இயக்கப்படும். பொள் ளாச்சி - கோவை இடையே பகுதியாக ரத்து  செய்யப்படுகிறது. இதேபோல, கோவையி லிருந்து ஜூலை 14, 16, 18 மற்றும் 20 ஆகிய  தேதிகளில் பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்ப டும் கோவை - கண்ணூர் விரைவு ரயில் (எண்:  16608) கோவை - பாலக்காடு இடையே மட்டும்  இயக்கப்படும். பாலக்காடு - கண்ணூர் இடையே இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டம், சூலூர் கிளை சார்பாக தீக்கதிர் நாளிதழின் 10 ஆண்டு சந்தா சேர்ப்பு சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தாலுகா செயலாளர் ஏ. சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெ. ரவிந்திரன் மற்றும் தீக்கதிர் முகவர் எஸ்.வி. பழனிச்சாமி ஆகியோர் இணைந்து சந்தாக்களை சேர்த்தனர். இதேபோன்று, கோவை மேற்கு நகரக்குழுவிற்குட்பட்ட பகுதியில் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தி, மேற்கு நகரச்செயலாளர் பி.சி.முருகன் மற்றும் டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செந்தில்பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.