திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.
திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 62 பேர் காயமடைந்திருப்பதாகவும், பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தில்லி என்.சி.ஆர், பீகார், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.