பறவைக்காய்ச்சல் பாதிப்பு : அமெ.வில் ஒருவர் பலி
அமெ.வில் பறவைக் காய்ச்சலால் (H5N1) பாதிக்கப்பட்ட நபர் பலியாகியுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் நோயினால் பாதிக்கப்பட்ட நபர் 65 வயதானவராக இருந்ததுடன் பிற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என தெரிவித்துள்ளனர். இதனால் யாரும் பயப்பட வேண்டாம். பறவைக் காய்ச்சலால் ஏற்படும் சுகாதார ஆபத்து கட்டுப்படுத்தும் அளவில் தான் உள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உதவிப் பொருட்களை கொள்ளையடிக்கும் இஸ்ரேல்
காசாவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தடுத்து வருகிறது என ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சனிக் கிழமை (ஜன.4) முதல் மூன்று நாட்கள் ஐ.நா அவை உதவிகள் செய்ய முயன்ற போது இஸ் ரேல் ராணுவம் தடுத்துவிட்டது. அதுமட்டுமின்றி பாலஸ்தீனர்களுக்கு கொண்டு செல்லும் பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து திருடி வருகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
காலநிலை மாற்றத்தின் விளைவு: மெக்காவில் அதிகன மழை
காலநிலை மாற்றத்தின் காரணமாக சவூதி அதிகனமழையை சந்தித்துள்ளது. மெக்கா, ரியாத், அல்-பஹா, தபு உள்ளிட்ட முக்கிய நகரங்களும் கடுமையான வெள்ளத்தை சந்தித்துள்ளன. அதிகளவிலான வெள்ள நீர் வடிகால் வாய்க்கால் வாயிலாக வெளியேற முடி யாமல் வாகனங்களைஅடித்துச் சென்ற காணொ லிகள் வெளியாகின. காலநிலை மாற்ற பாதிப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகள் மிக அதிக கன மழையையும் பனிப்பொ ழிவையும் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு ஜனாதிபதியுடன் இந்தியத் தூதர் சந்திப்பு
மாலத்தீவுக்கான இந்திய தூதராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜி. பாலசுப்பிரமணியன் அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்சுவை சந்தித்து பேசியுள்ளார். முகமது முய்சுவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து தனது நியமன சான்றுகளை வழங்கிய பிறகு இரு தரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது பற்றி பாலசுப்ரமணியன் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாக உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சிறையில் ஆப்கன் அகதிகள் அடைப்பு
பாகிஸ்தான் தலைநகரில் வசிக்கும் சுமார் 800 ஆப்கன் மக்களை அந்நாட்டு அதிகாரிகள் சிறையில் அடைத்து வைத்துள்ளதாக ஆப்கன் தூதரகம் தெரிவித்துள்ளது. அடைத்து வைக்கப்பட்டுள்ள 800 பேரில் ஐ.நா. அகதிகள் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட சிலரும் உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் தங்க முடியாது என்ற சட்டம் உள்ள நிலையில் விசா எடுக்கும் நடைமுறையும் கடுமையாக உள்ளது.
‘அமெரிக்காவின் மாகாணமாக இணையலாம்’ : கனடாவை மீண்டும் அவமதிக்கும் டிரம்ப்
ஒட்டாவா, ஜன.7- அமெரிக்காவின் புதிய மாகாணமாக கனடா இணையலாம் என அந்நாட்டின் இறை யாண்மையை அவமதிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டொனால்டு டிரம்ப் மீண்டும் பேசி யுள்ளார். கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ பதவி ராஜினாமா அறிவிப்பு செய்த பிறகு இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் இதே போல டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஒரு மாகாணமாக கனடாவை இணைக்க வேண்டும் என பேசி சர்ச்சையை உருவாக்கினார். டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு கனடா, மெக்சிகோ,சீனா ஆகிய நாடுகளின் மீது 25 சதவீதம் வரை வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். மேலும் தொடர்ந்து கனடாவின் இறையாண்மையை மதிக்காமல் விமர்சித்து வந்தார். கனடா பெருமளவு அமெரிக்கா நலன் சார்ந்த பொருளாதார நாடாக மட்டுமே உள்ளது.இந்நிலையில் அமெரிக்கா கனடா மீது அதிக வரி விதித்தாலோ, தடை விதித்தாலோ அந்நாடு பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சென்று விடும் அபாயம் உள்ளது. இதற்கிடையில் ட்ரூடோவிற்கு எதிராக அவரது கட்சி எம்.பி.,க்கள் கடுமையான அதிருப்தியையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்ததுடன் அதன் வெளிப்பாடாக துணை பிரதமர் பதவி விலகினார். இந்நிலையில் தான் அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இணையலாம் என இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் கனடாவின் இறையாண்மையை அவ மதிக்கும் வகையில் தனது ஆதிக்க பேச்சை வெளிப்படுத்தியுள்ளார். கனடா அமெரிக்காவுடன் இணைவதை கன டாவில் வசித்து வரும் பலரும் விரும்புவார்கள். வர்த்தக ரீதியான அழுத்தங்களை அறிந்தே ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் குறையும். மேலும், ரஷ்ய மற்றும் சீனாவின் போர்க் கப்பல்களின் அச்சுறுத்தல் இல்லாமல் அவர்கள் வாழலாம். உங்களுக்கு தொந்த ரவுகளே இருக்காது. இதற்காக நாம் ஒன்றி ணைவோம். அதன் பிறகு கனடாவும் பெரிய நாடாக மாறிவிடும் என டிரம்ப் தற்போது கூறி யுள்ளார். டிரம்ப் இரண்டு முறை இவ்வாறு பேசி யும் கனடா பிரதமர் ட்ரூடோ கனடாவின் இறை யாண்மையை பாதுகாக்கும் வகையிலோ, டிரம்ப் இன் ஆதிக்கப் பேச்சுக்கு எதிராகவோ எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.