தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நிலை குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிறைவேற்றியுள்ள தீர்மானம் : தமிழ்நாடு தொழில் வளர்ச்சியாலும், உற்பத்தியா லும் இந்திய அளவில் முதல் வரிசையில் உள்ள மாநிலமாக திகழ்கிறது. தொழில் வளர்ச்சியில் மின்சாரம், பாய்லர், எஃகு ஆகிய துறைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மின்சார உற்பத்தியில் முக்கிய இடம் பெற்றுள்ள நெய்வேலி நிறுவனம் உருவாக்கத் தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பி. ராம மூர்த்தி மற்றும் ஏ.கே. கோபாலன் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
கட்சியின் சாதனைகள்
F பாய்லர் உற்பத்தி நிறுவனமான திருச்சி பி.எச்.இ.எல்(பெல்) ஜெர்மன் நிறுவனமான சீமென்ஸுக்கு விற்கப்பட இருந்ததைத் தடுத்த பெருமை மார்க்சிஸ்ட் கட்சிக்கு உண்டு
F சேலம் எஃகு ஆலையை தனியார்மயமாக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியது
F தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கவும், பாதுகாக்கவும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் செய்த பெரும் பங்களிப்பு
F தொழிற்சாலைகளைப் பாதுகாக்கும் அரணாக களத்தில் செயல்பட்டு வருதல்
தற்போதைய நிலை
1. தாராளமயக் கொள்கையால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன
2. பாஜக ஆட்சிக்குப் பின் புதிய பொதுத்துறை நிறுவனங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை
3. தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது
4. அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் மாநில அரசுகளுக்கிடையே போட்டி நிலவுகிறது
முதலீட்டாளர்களால் ஏற்படும் பிரச்சனைகள்
F தமிழக வளங்களையும் வரிச்சலுகைகளையும் முதலீட்டாளர்கள் சுரண்டுகின்றனர்
F நிரந்தரமற்ற வேலைவாய்ப்புகளால் தொழிலாளர் சுரண்டல் அதிகரிக்கிறது
F புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கண்காணிப்பின்றி செயல்படுத்தப்படுகின்றன
F சுற்றுச்சூழல் பாதிப்புகள் கவனிக்கப்படுவதில்லை
கோரிக்கைகள்
1. புதிய பொதுத்துறை நிறுவனங்களை உற்பத்தித் துறையில் உருவாக்க வேண்டும்
2. அந்நிய நேரடி முதலீடுகள் வேலைவாய்ப்பையும் புதிய தொழில்நுட்பத்தையும் உறுதி செய்ய வேண்டும்
3. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட புரிந்துணர்வுஒப்பந்தங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை ஒன்றிய, மாநில அரசுகள் வெளியிட வேண்டும்
4. செயல்படாத கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மாநில அரசு புனரமைக்க வேண்டும்
5.தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கான சேதுக்கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
6. மதுரை எய்ம்ஸ், நெய்வேலி போன்ற திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்\
அறைகூவல்
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மேற்குறிப்பிட்ட அடிப்படைக் கட்டமைப்பை உரு வாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றி ணைந்து போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு அறைகூவல் விடுக்கிறது.