articles

img

ஒரு சோசலிச கனவின் தேடல்... கியூபாவை நோக்கிய பயணம் - எம்.கண்ணன்

ஒரு சோசலிச கனவின் தேடல்...

மதன்முதலாக வெளிநாட்டு மண்ணில் காலடி வைக்கப்போகிறோம் என்ற எண்ணமே மனதில்  ஆயிரம் உணர்வுகளை எழுப்பியது. புதிய நாட் டின் வாசனை, அங்கு வாழும் மக்களின் முகங்கள், அவர்களின் கலாச்சாரம் - இவையெல்லாம் ஒரு பயணி யின் இயல்பான ஆர்வங்கள். ஆனால் எனக்கு இதை யெல்லாம் விட அதிக கவனம் ஈர்த்தது மனிதர்களைப் படிப்பது. தில்லி விமான நிலையத்தின் சலசலப்பில், எனது சக  பயணி பிரஜாசக்தி துளசி தாஸுடன் பேசிக்கொண்டி ருந்தபோது, ஒரு முக்கியமான சந்திப்பு நடந்தது. மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அயலுறவுத் துறையைக்  கவனிக்கும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அருண் குமாரை சந்தித்தோம். அவரது பயண அனு பவங்கள் எங்கள் பயணத்திற்கு ஒரு புதிய பரி மாணத்தைக் கொடுத்தன. “கியூபா அமெரிக்காவின் ஆதிக்கத்தால் எவ்வளவு  நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது என்பதை நீங்கள்  அங்கு காலடி வைக்கும் முன்னரே உணர முடியும்” என்ற  அவரது வார்த்தைகள் ஒரு முன்னறிவிப்பு போல் இருந்  தது. “அதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்ற அவரது டிவிஸ்ட் எங்களுக்கு மேலும் ஆர்வமூட்டியது. சரி, பரவாயில்லை, அதையும் சந்திக்கலாம் என்ற  மனநிலையுடன் நாங்கள் தயாராகிக்கொண்டிருந்த போது, தோழர் அருண் குமார் எங்களை கியூபா தூதர கத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு தூதரைச் சந்தித்த போது, ஒரு வரலாற்றுப் பாடம் நடந்தது. அந்த அறையில் முப்பது நிமிடங்கள் புடித்த கதை  ஒன்று விரிந்தது. கியூபாவின் இன்றைய நிலை, அதன்  வரலாறு, இந்தியாவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான  நல்லுறவு, எப்படியெல்லாம் கியூபாவிற்கு இந்தியா கைகொடுத்திருக்கிறது - இவையெல்லாம் தூதரின் குரலில் உயிர் பெற்றன. அந்த அறையின் சுவர்களில் தொங்கிய புகைப் படங்கள் அந்த வார்த்தைகளுக்கு சாட்சியாக நின்றன.  இந்திய தலைவர்களுடன் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா  ஆகியோரின் படங்கள் ஒரு வரலாற்று உரையாடலை நடத்திக்கொண்டிருந்தன. அந்த நிழல்களில் இருந்து வெளிவரும் கதைகள் எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவர்கள் வகுத்த வழியில் இன்றைய நிலையிலும் அந்த மக்கள் எந்தளவிற்கு சோசலிசத்தின் மேல் உறுதி யாக இருக்கின்றனர் என்பதைப் பார்க்கும் ஆவல் நம்மை  ஆட்கொண்டது. வெறும் சுற்றுலா அல்ல இது, ஒரு கொள்கையின் தேடல். அதிகாலையில் தில்லி விமான நிலையம் செல்லும்  போது, மனதில் ஒரு புதிய எதிர்பார்ப்பு. வெறும் வெளி நாட்டு பயணி அல்ல, ஒரு கொள்கை தேடல் செல்லும்  யாத்ரீகன் என்ற உணர்வு. கியூபா என்ற அந்த சிறு தீவு நாட்டில் பெரும் கனவுகள்  எப்படி வேர்விட்டு வளர்ந்திருக்கின்றன, அமெரிக்கா வின் முற்றுகையில் இருந்தும் எப்படி தன் சுதந்திரத்தைக் காத்திருக்கிறது என்பதைக் காண்பதே இந்த பயணத்தின்  உண்மையான நோக்கம். விமானம் பறக்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, மனதில் ஒரு கேள்வி மட்டுமே எழுந்தது - “சோசலிசம்  என்பது வெறும் கோட்பாடா, அல்லது வாழ்க்கை முறையா?” இந்த கேள்விக்கான பதில் கியூபாவின் தெருக்களில் கிடைக்கப்போகிறது. முதன் முதலில் வெளிநாடு பயணிக்கும்போது இமிகிரேஷன் சோதனைகள் பல கட்டங்களாக இருக்  கும் என்பது பொதுவாக அறியப்பட்ட விஷயம். ஆனால்  அதை நேரில் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. விமான நிலைய  பரிசோதனை அதிகாரிகள், பாதுகாப்பு காவலர்கள் அனைவரும் ஹிந்தியிலேயே பேசிக்கொண்டிருந்தனர். தமிழ் அன்பின் அடையாளம் உள்நுழைவு வாயிலில் நின்ற ஒரு பாதுகாப்பு காவ லரின் பக்கம் என் பார்வை நிலைத்து நின்றது. தமிழ் நாட்டைச் சேர்ந்த திடமான இளைஞர் ஒருவர் கையில்  நவீன ரக துப்பாக்கியை ஏந்தியபடி நின்று கொண்டி ருந்தார். என்னவோ தெரியாமல் இருவரும் ஒருவரை யொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். கண்ணும் கண்ணும் கலந்து பேசியது. “நீங்கள் எந்த ஊர்?” என்று தமிழில் கேட்டேன். “நான் தென்காசி... நீங்கள்?” என்றார் அந்த இளைஞர்  அதே உணர்வுடன். “கோவை” என்றேன். புன்னகையுடன் வாழ்த்துக் கூறி அனுப்பிவிட்டார். துருக்கி ஏர்லைன்ஸ் கவுண்டரில் உள்ளே சென்று துருக்கி ஏர்லைன்ஸ் வரிசையில் நின்று, லக்கேஜ் சோதனைப் பகுதியில் வரிசையில் நின்றேன். பாஸ்போர்ட், விசா, பத்திரிகையாளர் மாநாட்  டுக்கான அழைப்பிதழ், கியூபாவில் ரூம் புக்கிங் உள் ளிட்ட பல்வேறு ஆவணங்களை கையில் கொடுத்தேன். அதை வாங்கிப் பார்த்த அந்த பெண் அதிகாரி, “ஹவானா” என்று பார்த்தவுடனே அருகிலிருந்த கவுண்டரில் இருந்தவரைப் பார்த்தார். அவர் அடுத்த கவுண்டரில் இருந்தவரைப் பார்த்தார். பின்னர் அனைத்து ஆவணங்களையும் திரும்பத் திரும்பப் பார்த்தனர். ஆவணங்களில் இருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியா என்பதையும், ஹோட்டல் ரூம்  புக் செய்திருப்பது முதல் எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். சந்தேகத்தின் கேள்விகள் அனைத்தும் உண்மை என்று தெரிந்ததும், என்ன கேட்பது என்று தெரியாமல் தவித்தனர். “நீங்கள் எதற்காக கியூபா செல்கிறீர்கள்?” என்றார். “சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டுக்கு” என்றேன். “அதை நடத்துவது யார்?” என்றார்கள். “கியூபா பத்திரிகையாளர் சங்கம்” என்றேன். அதற்  கான அழைப்பிதழையும் காட்டினேன். சிறிது யோசித்தவர், “நீங்கள் ஓரமாக நில்லுங்கள். இன்னொருவர் வருவார். உங்கள் லக்கேஜ்களைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று மீண்டும் லக்கேஜ்களைக் கையில் கொடுத்தனர். நாற்பது நிமிட காத்திருப்பு ஒன்றும் புரியவில்லை. கியூபாவில் காலடி வைப்ப தற்கு முன்பே அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை  உணர முடியும் என்று தோழர் அருண்குமார் கூறியது நினைவுக்கு வந்தது. பின்னர் நானும் தோழர் துளசி தாசும் நாற்பது நிமிடம்  நின்றுகொண்டிருந்தோம். யாரும் வரவில்லை. நான்  மீண்டும் அதே இடத்துக்குச் சென்று, “யாரும் வர வில்லை. எதற்காக எங்களை நிறுத்தி வைத்திருக்கி றீர்கள்?” என்று கேட்டேன். “ஐந்து நிமிடம் பொறுங்கள், வருவார்கள்” என்று மீண்டும் கூறினர். பத்து நிமிடம் ஆன நிலையிலும் யாரும் வரவில்லை.  ஏறக்குறைய அந்த வரிசையில் இஸ்தான்புல்லுக்குச் செல்ல வேண்டிய அனைவரும் சென்றுவிட்டனர். வாக்குவாதம் மற்றும் முடிவு மீண்டும் அவர்களிடம் சென்று, “இனி இங்கிருந்து நகர முடியாது. எனக்கு பதில் சொல்லுங்கள். எதற்காக  நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்?” என்று வாக்குவாதம் செய்தவுடன் வேறொருவர் வந்தார். தனியாக ஒரு கவுண்டருக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஆவணங்களை வாங்கி மீண்டும் முதலிலி ருந்து ஆரம்பித்தார். “எதற்குப் போகிறீர்கள்? எங்கு தங்கு கிறீர்கள்? அங்கு என்ன செய்வீர்கள்? யார் வரச்  சொன்னார்கள்?” என்று துருவித் துருவிக் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், “எதற்காக இந்தக் கேள்விகள்? ஆவணங்கள் சரியாக இருக்கின்றன. விமான நிறு வனத்துக்கு எதற்கு இந்த வேலை? ஒன்று உள்ளே அனு மதிக்க முடியும், அல்லது முடியாது என்று கூறுங்கள். உங்கள் துருக்கி நிறுவனம் கியூபா அரசுடன் விமானச்  சேவையை செய்வதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதையும் மீறி எதற்காக நீங்கள் அமெரிக்காவைப் போன்று பயணிகளுக்கு இந்த நெருக்கடியைக் கொடுக்க வேண்டும்?” என்று குரைலை உயர்த்தி வாக்கு வாதம் செய்தவுடன்... “இல்லை, இது வழக்கமான விசாரணைதான்” என்றனர். “எங்களுக்கு முன்பு வந்தவர்களை இந்த விசாரணை  செய்யவில்லையே?” என்றேன். “அனுமதிக்க முடியாது என்று சொல்லுங்கள். நான்  கியூபா தூதரகத்தில் பேசுகிறேன்” என்றேன். உடனே “சரி, நீங்கள் செல்லலாம்” என்று அனுமதித்த னர். அப்போதுதான் புரிந்தது. நேட்டோ கூட்டமைப்பில் இருக்கும் துருக்கி அமெரிக்காவிற்கு எப்படி வால் பிடிக்கிறது என்பது.  அதன்பின்னர் லக்கேஜ்களை ஆய்வு செய்து அனுப்பிவிட்டு, நாங்கள் இருவரும் இமிகிரேஷன் பிரிவுக்குச் சென்றோம். அங்கும் நீண்ட வரிசை, வழக்க மான விசாரணைக்குப் பின்னர் அனுமதித்தனர். அதற்க டுத்து விமானம் நிற்கும் பகுதிக்குச் சென்று வரிசை யில் காத்திருந்தோம். ஆகாயத்தின் அணைப்பில்  விமானத்தின் வாசலைத் தாண்டிய அந்த வினாடி யில், நான் ஒரு புதிய உலகத்தின் கதவைத் திறந்து கொண்டிருந்தேன். அயல்நாட்டு விமானத்தின் உள்ளே  அடியெடுத்து வைத்தபோது, அது வெறும் போக்கு வரத்து சாதனம் அல்ல - ஒரு பறக்கும் அரண்மனை என்று உணர்ந்தேன். நவீன தொழில்நுட்பத்தின் கைவண்ணம் ஒவ்வொரு  மூலையிலும் பளிச்சிட்டது. மென்மையான தோல்  ஆசனங்கள், தனிப்பட்ட பொழுதுபோக்கு திரைகள்,  காதுகளுக்கு இசையமுதம் பரிமாறும் ஹெட்ஃபோன் கள், குளிர்ந்த உயரங்களில் உடலைப் பாதுகாக்கும் மென்மையான கம்பளிகள், கண்களை மூடி கனவுல கில் அலையவிடும் கண்ணாடி - இவையெல்லாம் ஒரு  காலத்தில் ராஜாக்களுக்கு மட்டுமே கிடைத்த ஆடம் பரங்கள். இன்று அவை சாதாரண பயணிகளின் கைகளில். வழக்கமான அறிவிப்புகள் ஒலித்தன - பாதுகாப்பு விதிமுறைகள், வெளியேற்ற வழிகள், உயிர்காக்கும் உப கரணங்கள். ஆனால் என் கண்கள் சக பயணிகளின் முகங்களில் பதிந்திருந்தன. அனுபவமிக்க பயணிகள் நிதானமாக செய்தித்தாள்களில் மூழ்கி இருந்தனர் - அவர்களுக்கு இது நித்திய வழக்கம். புதிதாக பறக்கும்  என்னைப் போன்றவர்கள் ஜன்னல்கள் வழியே உற்றுப்  பார்த்துக்கொண்டிருந்தோம், கண்களில் குழந்தைமைப் பிரமிப்பு. வர்க்க வேறுபாடுகள் இங்கேயும் தெரிந்தன. பிசினஸ் கிளாஸ் பயணிகள் தம் வசதிகளுடன் அமர்ந்திருக்க, நடுத்தர வர்க்கத்தின் நாங்கள் எல்லாவற்றையும் உற்சாகத்துடன் ரசித்துக்கொண்டிருந்தோம். ஆனால் அந்த உயரத்தில் அனைவரும் சமம் - பூமியின் பிள்  ளைகள் ஆகாயத்தின் அன்பில் பறந்து கொண்டிருப்ப வர்கள். விமானம் உயர்ந்தது. பூமி சுருங்கிக்கொண்டே வந்தது. ஜன்னல் வழியே பார்த்தபோது, பூமிமாதா தன் வண்ணமயமான புடவையை விரித்துக் காட்டு வது போல் இருந்தது. வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு  அழகுகளைக் காட்டின. இயற்கையின் கோபம் குவிந்தபூமி அப்போது என் அருகிலிருந்த மேற்கு வங்கத்தின் புத்திஜீவி, ஸ்பெயினுக்கு தன் கனவுகளைத் தேடிச் செல்லும் பயணி, என் ஆர்வத்தைக் கண்டு நிலவியல்  பாடம் சொல்லத் தொடங்கினார். அவரது குரலில் அனு பவத்தின் முதிர்ச்சியும், பயணத்தின் ஞானமும் கலந்திருந்தன. “பாருங்கள்” என்று அவர் சொன்னார், “அது ஆப்கா னிஸ்தான். இயற்கையின் கோபம் குவிந்த பூமி.” கீழே காணப்பட்ட காட்சி மனதை உலுக்கியது. மலைகள் கடவுளின் சுத்தியலால் அடித்துத் தீர்க்கப்பட்  டவை போல், கல்லும் மண்ணும் கலந்து நின்றன. பச்சை  எங்கும் இல்லை. வறட்சி தன் முத்திரையைப் பதித்தி ருந்தது. சில இடங்களில் மட்டும் பனிக்காப்புகள் வெண்மையாக மின்னின. “இந்த நிலத்தில் எப்படி மனிதர்கள் வாழ்கிறார்கள்?” என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன். பெரிய  மலைகளும் பாலைவனங்களும் மட்டுமே பளிச்சிட்டன. இயற்கையின் கடுமையான முகமாக அது தெரிந்தது. “யாரும் இங்கே வாழ முடியாது” என்று அந்த நண்பர்  சொன்னார். ஆனால் அங்கே வாழும் மக்களின் வீரம், அவர்களது பொறுமை, கடினமான சூழலில் பிழைத்து நிற்கும் அவர்களின் உறுதி - இவையெல்லாம் அந்த வானிலிருந்து தெரியவில்லை. இதுவே பயணத்தின் அழகு. உயரத்திலிருந்து பார்க்கும்போது பூமி வேறு, அதில் இறங்கி நடந்தால் வேறு. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு கதை, ஒவ்வொரு  நிலத்திற்கும் ஒரு நாகரிகம். இஸ்தான்புல்லை நோக்கி செல்லும் இந்த பயணம்  வெறும் தூரம் கடப்பதல்ல - கண்ணுக்குத் தெரியாத எல்லைகளைத் தாண்டுவது, மனதின் எல்லைகளை விரிப்பது. ஆகாயத்தின் அணைப்பில் பறக்கும்..