தமிழகத்தில் கோவில், மடம், வக்ஃபு வாரிய சொத்துக்களில் பல தலைமுறை களாக வசிக்கும் லட்சக்கணக்கான குடியிருப்பாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி சிபிஐ (எம்) 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிலங்களின் நிலவரம்
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 44627 கோவில்களுக்கு சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் 1.26 லட்சத் திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பல தலைமுறை களாக குத்தகை விவசாயிகளாகவும், குடி யிருப்புக்கான அடிமனைகளில் 56 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பயனாளிகளின் குடும்பங் கள் வீடு கட்டி அடிமனை வாடகைதாரர்களா கவும் வாழ்ந்து வருகின்றனர்.
கோவில் நிலங்களின் நிலைமை
கோவில்களுக்கு சொந்தமான கோவில்க ளை சுற்றியுள்ள 22 ஆயிரத்துக்கும் மேற் பட்ட கட்டடங்களில் குறு,சிறு வணிகர்கள் கட்டட வாடகையாளர்களாக பயன்படுத்தி வரு கின்றனர். இதேபோன்று இஸ்லாமியர்களுக் கான வக்ஃபு போர்டு கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான பயனா ளிகள் உள்ளனர்.
பயனாளிகளின் நிலை
மேற்கண்ட 3 பிரிவினர்களில் 90 விழுக்கா ட்டிற்கு மேலானவர்கள் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க பிரிவினைச் சார்ந்தவர்களே. பழைய வாடகை முறை 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவில் நிர்வாகமும் பயனாளிகளும் இணைந்து தீர்மானித்துக் கொண்ட அளவிலேயே விவசா யிகளுக்கு குத்தகைத்தொகை தானியமா கவும், பகுதி தொகையாகவும், அடிமனைப் பயனாளிகளுக்கும், கட்டடப் பயனாளி களுக்கும் மாத வாடகையாகவும் தீர்மானிக்கப் பட்டு பயனாளிகளால் செலுத்தப்பட்டு வந்தது. 2004க்குப் பின் மாற்றங்கள் இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் அரசாணை 353 இன்படி நியாய வாடகை நிர்ணயம் என்ற பெயரில் வாடகை நிர்ணயக் குழுவால் தீர்மானிக்கப்பட்ட அடிமனை வாடகையும், கட்டட வாடகையும் பல நூறு மடங்கு உயர்த்தியும், உயர்த்தப்பட்ட வாடகையின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டு முதல் நிலுவைத் தொகையாக பல லட்சங்கள் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
போராட்டமும் அரசாணைகளும்
இந்த அறிவிப்பை எதிர்த்து அடிமனைப் பயனாளிகளும் கட்டடப் பயனாளிகளும் மேற்கொண்ட அமைப்பு ரீதியான பல்வேறு தொடர் போராட்ட நடவடிக்கைகளின் விளை வாக தமிழ்நாடு அரசு 2007 ஆம் ஆண்டு அரசாணை 456-ஐயும், 2010 ஆம் ஆண்டு அரசாணை 298- ஐயும் வெளியிட்டது. அரசாணைகளின் விளைவு இந்த அரசாணைகள் அடிப்படையில் மாத வாடகைத் தொகை மறுசீரமைக்கப்பட்டு பய னாளிகளுக்கு அறிவிக்க செய்து வசூலிக்கப் பட்டு வந்தது.
2016க்குப் பின் புதிய நெருக்கடி
இந்த நிலையில், மீண்டும் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் 2016 ஆம் ஆண்டு முதல் அறநிலையத்துறை சட்டப் பிரிவு 34ஏ, அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கின்றோம் என்ற பெயரில் பல மடங்கு வாடகை உயர்த்தப் பட்டு, நிலுவைத் தொகையாக பல லட்சங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வாடகை உயர்வின் அளவு உதாரணமாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள பயனாளிகளுக்கு 2016 ஆம் ஆண்டு வரை மாத வாடகையாக ரூபாய் 4000 செலுத்திய பயனாளி, 2016 ஆண்டு முதல் மாத வாடகையாக ரூபாய் 40,000 செலுத்த வேண்டும் என்றும், நிலுவைத் தொகையாக ரூ.6 லட்சங்கள் முதல் ரூ.60 லட்சங்களுக்கு மேல் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்த தவறினால் அவர் கள் வெளியேற்றப்பட்டு அறநிலையத்துறை சட்டத் பிரிவு 78 மற்றும் 79 படி சீல் வைக்கப் படும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
விவசாய நிலங்களின் நிலைமை
அதே போல் கோவில்களுக்கும், மடங்க ளுக்கும் சொந்தமான விவசாய நிலங்களில் பல தலைமுறைகளாக குத்தகை விவசாயம் செய்து வரும் பயனாளிகளுக்கு எந்த அரசா ணையின் வழிகாட்டுதலும் இன்றி மேலெ ழுந்த வாரியாக குத்தகை தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு வருகின்றது.
விவசாயிகள் மீதான நடவடிக்கைகள்
குத்தகைத் தொகையை மறுப்பவர்களு க்கு மறு ஏலம் என்ற பெயரில் குத்தகை மாற்றம் செய்வதற்கும், நிலத்தை விட்டு வெளி யேற்றுகின்ற நடவடிக்கையும் சட்டப்பிரிவு 78-இன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சாகுபடியில் ஈடுபட்டு வரும் குறு-சிறு விவசாய மக்களின் வாழ்வாதாரத்தையே இந்த நடவ டிக்கைகள் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
வணிகர்களின் நிலைமை
அது மட்டுமன்றி கோவில்களை சுற்றி உள்ள கோவில்கள் சொந்தமான கட்டடங்க ளில் வணிகம் செய்து வரும் குறு சிறு வணி கர்களுக்கும் புதிய வாடகை நிர்ணயம் என்ற பெயரில் பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டு அவர்களும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாநாட்டின் கோரிக்கைகள்
எனவே மாநில அரசு கீழ்க்கண்ட கோரிக் கைகளை நிறைவேற்றிட இம்மாநாடு கோருகிறது:நில உரிமை தொடர்பானவை:
V பல தலைமுறைகளாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு, வக்ஃப் போர்டுக்கு சொந்தமான
விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கான அடிமனைகளைப் பயன்படுத்தி வரும்பயனாளிகளில் பொருளாதார ரீதியில்மேம்பட்டவர்களுக்கு சாத்தியமான விலையிலும், பொருளாதார ரீதியில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாகவும் அறநிலையத் துறைச் சட்டம் 34இன் படி கிரையப்பட்டா வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்.
வாடகை தொடர்பானவை:
V கிரையப் பட்டா நடைமுறைக்கு வரும் காலம் வரை புதிய வாடகை நிர்ணயக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் 2016 க்கு பின்பான வாடகை உயர்வு மற்றும் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு மறு சீரமைக்கப்பட வேண்டும்.
V இந்து அறநிலையத்துறை, அடிமனைப் பயனாளிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்வது என்பது “சந்தையில் நிலவும்நிலத்தின் விற்பனை மதிப்பு” என்ற அடிப்படையில் இல்லாமல் அறநிலையத்துறைச் சட்டம் 34 ஏ - படி “சந்தையில் நிலவும் நிலத்திற்கான வாடகை மதிப்பு” என்ற அடிப்படையில் வாடகையை தீர்மானிக்க வேண்டும்.விவசாயிகள் தொடர்பானவை:
V விவசாய நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் சிறு,குறு விவசாயிகளை மறு ஏலம் என்ற பெயரில் வெளியேற்றாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் குத்தகைத் தொகை நிர்ணயித்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வணிகர்கள் தொடர்பானவை:
V கோவில்களுக்கு சொந்தமான கட்டடங்களில் வணிகம் செய்து வரும் பயனாளிகளுக்கு மேலெழுந்த வாரியாக வாடகை நிர்ணயிக்காமல் குறு சிறு நடுத்தரப் பிரிவுகளாக வகைப்படுத்தி வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கைகள்:
V தன்னிச்சையாக உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் குத்தகையை செலுத்தாத பயனாளிகள் மீது அறநிலையத்துறைச் சட்டம் 78, 79 முதலானவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
V கோவில் இடங்களில் தொடர்ந்து ஐந்தாண்டுகாலம் குடியிருப்பவர்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை 318ஐ செயல்படுத்திட மாநில அரசு உடன் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இனாம் நிலங்கள்:
V மாநிலம் முழுவதும், பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இனாம் ஒழிப்பு சட்டப்படி பட்டா வழங்கப்பட்ட நிலங்களை தற்போது பட்டாவை ரத்து செய்து அறநிலையத்துறை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை கைவிட வேண்டும்.வக்ஃபு நிலங்கள்:
V வக்ஃபோர்டு இடங்களில் உள்ள அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகளை வெளியேற்றிட மேற்கொள்ளப்படும், நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.இந்த தீர்மானத்தை மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன் முன்மொழிய, மாநிலக் குழு உறுப்பினர் எம். மகாலெட்சுமி வழிமொழிந்தார். விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஐ(எம்) மாநில மாநாடு இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.