districts

img

45 நாள் கெடு முடிய 4 நாட்கள் மட்டுமே உள்ளன! அடுத்த போராட்டத்துக்குத்  தயாராகும் விவசாயிகள்

திருப்பூர், ஜன.4 - திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்களால்  கடித்துக் கொல்லப்படும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விவசாயிகளின்  வளர்ப்புக் கால்ந டைகளுக்கு இழப்பீடு வழங்க 45 நாட்களில்  தீர்வு காணப்படும் என மாவட்ட நிர்வாகம் உறு தியளித்திருந்தது. காலக்கெடு முடிவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரை அரசுத் தரப்பில் எந்த  உத்தரவும் வெளிவரவில்லை.எனவே விவ சாயிகள் அடுத்தக் கட்டப் போராட்டத்துக்கு தயாராக உள்ளனர். திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி இதர மாவட்டங்களிலும் தெரு நாய்களால் வளர்ப்புக் கால்நடைகள் கடித்துக் கொல் லப்படுவது தொடர் கதையாக உள்ளது. திருப் பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆறு மாத  காலத்தில் மட்டும் பல நூறு ஆடுகள், கன்றுக்  குட்டிகள் மற்றும் கோழிகள் தெரு நாய்கள்  கடித்து பலியாகி உள்ளன. இங்கும், அங்கு மாக தெரு நாய்களால் ஆடு, மாடுகள் கடித் துக் கொல்லப்பட்ட சம்பவங்களில் காவல்  நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படா மல், பிரேத பரிசோதனை சான்றிதழ் தராமல் இருந்தனர். உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடும் தரப்படவில்லை. இந்த நிலையில் விவசாயிகள் போராடத்  தொடங்கினர். தெரு நாய்களைக் கட்டுப்படுத் தவும், கால்நடைகள் உயிரிழப்புச் சம்பவங் களைத் தடுத்து நிறுத்தவும் வலியுறுத்திய துடன், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்  கோரினர். கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று  பலியான கால்நடைகளுடன் காங்கேயத்தில்  இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டனர். இதையடுத்து காங்கேயம் வட்டாட்சியர்  மற்றும் காவல் துறையினர், போராட்டத்திற்கு  அணிதிரண்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் தெரு நாய்களால்  கொல்லப்படும் கால்நடைகளுக்கு சான்றிதழ்  அளிப்பதாகவும், இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதா கவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் 45 நாட்கள் கால அவகாசத்தில் அரசிடம் இருந்து நல்ல  முடிவை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தி ருந்தனர். இதற்கிடையில் பல்வேறு பகுதிகளில் கால்நடைகள், தெரு நாய்களால் கடித்துக் கொல்லப்படுவது தொடர்கதையாக இருந் தது. விவசாயிகளுக்கு கால்நடைகள் இறப்பு  குறித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இழப் பீடு குறித்து அறிவிப்பு எதுவும் இதுவரை  வரவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கி ழமை இரவு, சனிக்கிழமை அதிகாலைக் குள் காங்கேயம் அருகே ஒரு கிராமத்திலும்,  ஊத்துக்குளி அருகே சாலப்பாளையத்திலும் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காங்கேயம் அருகே ஒரு கோழிப்பண்ணை யில் புகுந்த தெரு நாய்கள் 270 கறிக்கோழி களைக் கடித்துக் கொன்றன. சாலப்பாளை யத்தில் மூன்று ஆடுகள் வெறிநாய்கடிக்கு ஆளாகின. இதில் ஒரு ஆடு இறந்துவிட்டது. மற்ற இரண்டு ஆடுகள் படுகாயம் அடைந்து  உயிர் பிழைக்குமா என்று தெரியாத நிலை  உள்ளது. கால்நடைகளை இழப்பதால் விவ சாயிகள் பொருளாதாரத்தையும், தங்கள்  வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர்  பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த நவம்பர் 23ஆம் தேதி நடத்திய போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட ஆட்சிய ரின் அறிவுரையின் பேரில் 45 தினங்களில் இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்று காங்கயம்  வட்டாட்சியரின் கடிததத்தின்படி  இன்னும் நான்கு தினங்கள் உள்ளன. எனினும் தற் போது போராட வேண்டாம், மாவட்ட ஆட்சிய ரிடம் இதுகுறித்துப் பேசுவதாக காங்கேயம் வட்டாட்சியர் கூறியதாக விவசாயிகள் தெரி வித்தனர். ஆட்சியர் சொன்ன கெடு முடிய இன்னும் நான்கு தினங்கள் உள்ளன. அது வரை காத்திருப்போம் என்றும் அவர்கள் கூறி னர்.