திருப்பூர், ஜன.4- திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத்திரு விழாவை சனியன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண் மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், நத் தக்காடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் காங்கே யம் இன்ஸ்டிட்யூட் ஆப் காமர்ஸ் வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா சனி யன்று நடைபெற்றது. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வை யிட்டனர். இந்த கலைத்திருவிழாவில், 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான 11 வகையான போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 1,050 அரசுப் பள்ளி மாணவர்கள், 1030 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 2080 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈ. பிரகாஷ், திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.