districts

img

முதல்வர் திறந்து வைத்த நலவாழ்வு மையம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்

திருப்பூர், ஜன.4- தோட்டத்துப்பாளையம் அருகே கடந்த ஆண்டு முதல்வர்  திறந்து வைத்த நலவாழ்வு மையம்  இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல், சமூக விரோதிகளின் கூடா ரமாக மாறியுள்ளது என மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.  திருப்பூர் மாநகராட்சி தோட்டத் துபாளையம் சிட்டி கார்டன் பகுதி யில் மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத் துறை சார்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நகர்புற நல வாழ்வு  மையம் கட்டப்பட்டது. ரூ.25  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த நலவாழ்வு மையத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனால் திறக்கப்பட்டு ஓர் ஆண்டு  ஆகியும் இன்னும் மக்கள் பயன்பாட் டுக்கு வரவில்லை. மேலும், இது  சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் கூடாரமாக மாறி யுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள்  கூறுகையில், தோட்டத்துப்பாளை யம் காமாட்சி அம்மன் கோவில் வீதி,  சிட்டி கார்டன், பெத்தேல் சிட்டி, ஜி.என் நகர்  உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள் ளன. இங்கு வாழும் மக்கள் பயன்பெ றும் வகையில் நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வழி யாக திறந்து வைத்தார். இப்பகுதி யில், சுகாதார நிலையம் அமைக்க  வேண்டும் என பல கட்ட போராட்டங் களுக்கு பிறகு இது அமைக்கப்பட் டது. ஆனால் திறந்து ஓர் ஆண்டு  ஆகியும் இன்னும் மக்கள் பயன்பாட் டுக்கு வரவில்லை. இதனால், இங்கு  உள்ள வயதானோர், கர்ப்பிணி  பெண்கள் மற்றும் குழந்தைகள்  மருத்துவத்திற்கு தனியார் மருத் துவமனைக்கு செல்ல வேண்டியுள் ளது.  மேலும், திறக்கப்படாத இந்த  நலவாழ்வு மையத்தில் சமூக  விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு  வருகின்றனர். ஆங்காங்கே மது பாட் டிகள் மற்றும் புதர் மண்டி கிடக்கி றது. இந்த கட்டிடத்தின் ஜன்னல்க ளும் உடைந்துள்ளது. இது மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை என் றால், கட்டிடம் முழுமையாக சேத மடைய வாய்ப்பு உள்ளது. எனவே  உடனடியாக இந்த நகர்ப்புற நல  வாழ்வு மையத்தில் மருத்துவர்கள்,  செவிலியர்கள் நியமித்து உடனடி யாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர் பார்ப்பதாக தெரிவித்தனர்.