articles

img

மக்கள் கருத்தறியாமல் கிராம ஊராட்சிகளை இணைக்கக் கூடாது!

சிபிஐ(எம்) மாநில மாநாடு வலியுறுத்தல்

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில், தமிழக அரசின் நகர்ப்புற உள்ளாட்சி விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் கருத்தறியாமல் கிராம ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மாநாடு வலியுறுத்தியுள்ளது.

அரசின் புதிய உள்ளாட்சி விரிவாக்கத் திட்டம்

தமிழ்நாடு அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களை விரிவாக்கம் செய்வதன் மூலமாகத்தான் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமப்புற பஞ்சாயத் துகளை இணைப்பதும், மாநகராட்சியுடன் பேரூராட்சி, நகராட்சி, கிராமப்புற ஊராட்சிகளை இணைப்பதும், கிராமப்புற ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றுவ தும் இதில் அடங்கும்.

கட்சியின் எதிர்ப்பு நடவடிக்கைகள்

ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட் சிப் பிரதிநிதிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளரி டம் மனு அளித்தனர். மக்களின் கருத்தறிய கிராம சபை கூட்டங்கள் நடத்தி, மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கு பின்பு தான் இணைப்பு நடவடிக்கை கள் குறித்த முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். அப்போது உள்ளாட்சித் துறை செயலாளர் மக்கள் கருத்தறியாமல் இணைக்க மாட்டோம் என உறுதிய ளித்திருந்தார்.

கிராம ஊராட்சிகளின் அடிப்படைப் பிரச்சனைகள்

கிராமப்புற ஊராட்சிகளில் அடிப்படைத் தேவைக ளை நிறைவேற்றுவதற்கான பணியாளர்கள் நிய மனம் கடந்த 25 வருட காலமாக நிலுவையில் உள்ளது. குறிப்பாக தூய்மைப் பணியாளர் நியமனம் கிராமப் புற ஊராட்சிகளில் மிகக் குறைவு. பத்தாயிரம் வாக்கா ளர்களைக் கொண்ட கிராமப்புற ஊராட்சியில் 10க்கும் குறைவான தூய்மைப் பணியாளர்களே பணியாற்று கிறார்கள்.

இணைப்பால் ஏற்படும் பாதிப்புகள்:

V 100 நாள் வேலைத் திட்டம் பறிபோகும் அபாயம்
V இலவச வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் பாதிப்பு
V அரசாணை 152, 139 மூலம் தூய்மைப் பணியாளர் அவுட்சோர்சிங் செய்யப்படுவது சுரண்டலை அதி
கரிக்கும்
V குடியிருப்புகளின் சொத்து வரி கடுமையாக உயரும்
வார்டு மறுசீரமைப்பு கோரிக்கை
தமிழ்நாடு அரசு உள்ளாட்சி மன்றங்களை வார்டு
மறுவரை செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த அதிமுக
ஆட்சிக் காலத்தில் அலுவலர்கள் மூலமே இது செய்யப்
பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களை அமைத்து வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மாநாட்டின் முக்கிய கோரிக்கைகள்
V மக்கள் கருத்தறியாமல் கிராம ஊராட்சிகளை நகர்ப்
புற உள்ளாட்சிகளுடன் இணைக்கக் கூடாது.
V அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு மூலம் வார்டு மறுவரையறை செய்ய வேண்டும்.
V கிராம ஊராட்சிகளில் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இத்தீர்மானத்தை பழநி நகர்மன்ற துணைத் தலை
வர் கே.கந்தசாமி முன்மொழிய, கோவை மாநகராட்சி உறுப்பினர் கண்ணகி வழிமொழிந்தார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.