சென்னை,ஜனவரி.05- ABVP நிர்வாகிகளுக்கு நூதன முறையில் உயர்ந்தீமன்றம் தண்டனை வழங்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் அவதூறு கருத்துக்களைப் பரப்பியதோடு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தில் ரகளையில் ஈடுபட்ட வழக்கில் பாஜக மாணவர் அமைப்பான ABVP நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கும் விசாரணையில் ABVP நிர்வாகிகள் யுவராஜ், ஸ்ரீதரனுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மாத காலம் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிபவர்களுக்கு உதவி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.