tamilnadu

img

பெ.சண்முகத்திற்கு தலைவர்கள் நேரில் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெ.சண்முகத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பொதுச் செயலாளர் து.ரவிக்குமார் எம்.பி., துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோரும் ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் கு.ஜக்கையன் உள்ளிட்ட நிர்வாகிகளும், சென்னையில் உள்ள மாநிலக்குழு அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு பெ.சண்முகம் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியின் போது சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத், சட்டமன்ற குழு தலைவர் நாகைமாலி எம்எல்ஏ., எம்.சின்னதுரை எம்எல்ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.