துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரமா?
புதுதில்லி, ஜன. 7 - பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் ஆளுநருக்கே அதிக அதிகாரம் வழங்கி, பல்கலைக்கழக மானி யக்குழு (UGC) விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை யும் வெளியிட்டுள்ளது. இதற்கு தற்போது நாடு முழு வதும் கண்டனம் எழுந்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பிற பணியாளர் களை நியமிப்பதற்கான குறைந்த பட்ச தகுதிகள் குறித்த விதிமுறை களை பல்கலைக்கழக மானியக் குழு மாற்றியமைத்துள்ளது. அதாவது, 2018-ஆம் ஆண்டின் “பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களை நிய மிப்பதற்கான குறைந்தபட்ச தகுதி கள் மற்றும் உயர்கல்வியில் தரத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கை கள்” என்ற இந்த விதிமுறைகளில் திருத்தம் செய்து, “பல்கலைக்கழ கங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரி யர்கள் மற்றும் பிற கல்வி பணி யாளர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு அளிப்பதற்கான குறை ந்தபட்ச தகுதிகள் (2025) விதிமுறை கள் மற்றும் வழிகாட்டுதல்கள்” என்ற வரைவை உருவாக்கியுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த புதிய வரைவு விதிமுறைகள் மற்றும் வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வரைவின் மீது ஏதேனும் கருத்துகள் இருந்தால் யுஜிசி இணையதளத்தில் கொடுக் கப்பட்ட மின்னஞ்சல் முகவரி வாயி லாக கருத்து தெரிவிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு செய லாளர் மனிஷ் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த புதிய வரைவு யுஜிசி இணை யதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இந்த வரைவு விதிமுறைகள் குறித்த தங்கள் கருத்துக்களை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு முன்னதாக regula tions@ugc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு மாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
துணைவேந்தர் நியமனம்
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் செய்வதற்காக தேடுதல் குழு அமைக்கப்படும். இந்த தேடுதல் குழுவில் ஆளுநர் ஒருவரை யும், பல்கலைக்கழகம் சார்பாக ஒரு வர் மற்றும் மாநில அரசு சார்பாக ஒருவர் என மூவர் இருப்பர். ஆனால், யுஜிசி வெளியிட்டுள்ள புதிய திருத்தத்தின்படி துணை வேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை பல்கலை வேந்தர் மட்டுமே நியமனம் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஆளுநர் ஒருவரையும், யுஜிசி தலை வர் ஒருவரையும், பல்கலைக்கழகம் சார்பாக ஒருவரையும் நியமனம் செய்வர் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தேடுதல் குழுவில் மாநில அரசு ஒருவரை நியமனம் செய்வதற்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல, துணைவேந்தராக தேர்வு செய்யப்படும் நபர் பேராசிரி யராக மட்டும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆராய்ச்சி அல்லது அகாடமி கல்வி நிர்வாக அமைப்பு களில் சீனியர் பதவியில் இருப்ப வர்கள், தொழில், பொது நிர்வாகம், பொதுக் கொள்கை அல்லது பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் கல்வி சார்ந்த பங்களிப்பு களின் அடிப்படையில் துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர் களாக எடுத்துக் கொள்ளப்படு வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்திலும், அவர்களின் கல்விப் பின்னணி யை காட்டிலும், நடைமுறை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி திறன் ஆகியவற்றின் அடிப்படை யிலேயே அவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் எந்தப் பாடத்தை படித்திருந்தாலும், நெட் தேர்ச்சி மற்றும் பிஎச்.டி பட்டம் பெறும் பாடத்தை அடிப்படையாகக் அவர்கள் ஆசிரியராக நியமிக்கப் படுவர். ஒப்பந்த முறையில் ஆசிரியர்கள் அதிகப்பட்சமாக 6 மாத காலத்திற்கு பணியமர்த்தப்படலாம் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது.மேலும் துணைவேந்தர் பதவிக்காலமும் 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் யுஜிசியின் இந்த புதிய விதிகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தன்னாட்சியைப் பறிக்கும் போது தமிழகம் அமைதியாக இருக்காது ஒன்றிய பாஜக அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை
சென்னை, ஜன. 7 - ‘’கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது தமிழகம் அமைதியாக இருக்காது,’’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை சாராதவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கும் வகையிலும் யுஜிசி கொண்டு வந்துள்ள விதிமுறைகள், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி மீதான நேரடித் தாக்குதல் ஆகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கையானது, அதிகாரங்களை ஒரே இடத்தில் குவிக்கவும், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை குறைக்கவும் வழிவகுக்கும். கல்வியானது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு களின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டுமே அன்றி, பாஜக அரசின் விருப்பத் திற்கு ஏற்ப செயல்படும், ஆளுநரின் கட்டளைக்கு ஏற்ப இருக்கக்கூடாது. கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது, அதிக உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்ட மாநிலங்களில் முன்னணியில் இருக்கும் தமிழகம் அமைதியாக இருக்காது. கல்வி என்பது நமது அரசியலமைப்பில் ஒருங்கி ணைந்த பட்டியலில் இருக்கும் பிரிவு என்ற நிலையில், யுஜிசி-யின் இந்த நட வடிக்கை ஒரு தலைபட்சமானது. இந்த அத்துமீறலை ஏற்க முடியாது. சட்ட ரீதியாக வும், அரசியல் ரீதியாகவும் தமிழகம் போராடும்” என்று முதல்வர் எச்சரித்துள்ளார்.