வேதாந்தா கார்ப்பரேட் முதலாளியின் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்காக அரிட்டாப்பட்டி பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை அழிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் திட்டத்தை அடியோடு ரத்து செய்ய வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செவ்வாயன்று நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரையை நோக்கி 20 கிலோமீட்டர் தூரத்திற்கு மாபெரும் ஊர்வலம் நடத்தினர்.