சாதிய- மதவாத சக்திகளை முறியடிப்போம்; மாநிலங்களின் உரிமை மீட்போம் - சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேட்டி
சென்னை, ஜன. 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு, கடந்த ஜனவரி 3 முதல் 5 வரை விழுப்புரத்தில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், மக்கள் ஒற்றுமையைக் குலைக்கும் சங்-பரிவாரங்களின் சாதிய - மதவாத அணிதிரட்டல்களை முறியடிப் போம்; நிதி அதிகாரம் உட்பட மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்திற்கு எதிரான தமிழக அரசின் போராட்டங்களுக்கு துணை நிற்போம்; தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அரசுத் துறை ஊழியர்கள், மாற்று திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நலன் காக்கும் போராட்டத்தை வலுவாக முன்னெடுப்போம் என்று முடிவு கள் எடுக்கப்பட்டு உள்ளதாக கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணியில், பெ. சண்முகம், சென்னை தியாகராயர் நகரிலுள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி. ராமமூர்த்தி நினைவகத்தில் செவ்வாயன்று மாலை, செய்தியாளர்களைச் சந்தித்தார்
அரசியல் - கலாச்சாரத் தளங்களில் பணி
அப்போது, மாநாட்டு முடிவுகளை விளக்கி அவர் மேலும் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு, விழுப்புரத்தில், 2025 ஜனவரி 3-5 தேதி களில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. அரசியல், சமூகம், பொரு ளாதாரம், கலாச்சார தளங்களில் கட்சி மேற் கொள்ள வேண்டிய வினைகள், எதிர்வினை களை முடிவு செய்தோம்.
நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு வஞ்சகம்
மாநில உரிமைகளைப் பறித்து, ஆளு நர்களை வைத்து அத்து மீறிவரும் ஒன்றிய ஆட்சியின் போக்கைக் கண்டித்து, இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசுகளின் நிதி உரிமைகளையும் இம்மாநாடு விவாதித்தது. செஸ் – சர்சார்ஜ் என்ற பெயரில் வரி வசூலித்து, மாநிலங் களுக்கான நிதிப் பகிர்வில் வஞ்சகம் இழைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டு மென மாநாடு கோரியது. மாநில உரிமை களை காப்பதற்கான தமிழ்நாடு அரசின் முனைப்புகளுக்கு மாநாடு தனது ஆதரவை தெரிவித்தது.
சாதிய - மதவாத அணிதிரட்டலில் சங்-பரிவாரம்
தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை குலைத்து, நல்லிணக்க வாழ்வை கெடுக்க முயற்சிக்கும் சங்- பரிவாரங்களின் முயற்சி யையும், சாதி அடிப்படையிலான திரட்டல்கள் மக்களிடையே பகைமையை அதிகரிப்பதை யும், சித்தாந்த அடிப்படையில் கல்விநிலை யங்களில் நடக்கும் ஊடுருவல்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கைவிடப்பட வேண்டிய நவ தாராளமய கொள்கைகள்
தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்டங்களை வரவேற்கும் அதே சமயத்தில், நவ - தாராளமய கொள்கை களை ஒட்டியும், ஒன்றிய அரசின் பொருளா தாரப் பார்வையை ஒட்டியும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென மாநாடு கோரியுள்ளது.
புதிய கல்விக்கொள்கையை முற்றாகப் புறந்தள்ளுக!
தேசிய கல்விக்கொள்கையின் பெயரால், அதிகாரக் குவிப்பு, கல்வியில் ஆர்எஸ்எஸ் சிந்தனையை புகுத்துதல், வணி கமயம் ஆகிய அபாயங்களை உறுதியாக எதிர்த்திடவும், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை வற்புறுத்தும் ஒன்றிய ஆட்சியின் நிர்ப்பந்தங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிடக் கூடாது, தேசிய கல்விக் கொள்கையை முற்றாகப் புறந்தள்ளி, மாநில கல்விக் கொள்கைக்காக அமைக்கப்பட்ட குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படை யில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மென மாநாடு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை உரு வாக்கவும், கூட்டுறவு தேர்தல்களை விரைந்து நடத்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்படாத அரசுத்துறை ஊழியர் கோரிக்கைகள்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் – ஓய்வூதியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கார்ப்பரேட்டுகளின் தொழிற்சங்க உரிமை பறிப்பு
கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற் சங்க விரோத அணுகுமுறையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்துவதுடன், தொழி லாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரித்து அமலாக்க வேண்டுமென்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
விவசாயிகள் நலன்காக்க வேண்டும்
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்கப்பட வேண்டும். பாசன மேம்பாடு, விவசாயக் கடன் ரத்து ஆகியவற்றை மேற்கொள்வதுடன், நிலம் கையகப்படுத்துதலிலும், பயிர்க் காப்பீட்டிலும் விவசாயிகளின் உரிமை களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்தும், ஒன்றிய - மாநில அரசுகள் விவசாயிகள் நலன் காக்க வேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்தியுள்ளது.
200 நாட்கள் வேலை வழங்க வேண்டும்
மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதித் திட்டத்தில் வேலை நாட்கள் 200 ஆக உயர்த்தப்படுவதுடன், குறைந்தபட்ச நாள் கூலி ரூ. 600 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த திட்டத்திற்காக ஒன்றிய அர சின் நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தி உள்ளது.
தலித்- பழங்குடி, பெண்கள் மீது தாக்குதல்கள்
பெண்கள், குழந்தைகள், பட்டியல் சாதி, பழங்குடியினர், சிறுபான்மையினர் மீது, அதிகரித்துவரும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திடவும் – சட்ட உரிமைகளை உறுதி செய்திடவும் மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகள் பற்றியும் விவாதித்த மாநாட்டில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள், இட ஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.
நகர்வாழும் உரிமையை உறுதி செய்ய வேண்டும்
நிலம், குடிமனை, மனைபட்டா, நகர் வாழும் உரிமை ஆகியவற்றுக்கான மக்க ளின் நீண்டகாலக் கோரிக்கைகள் நிறை வேற்றப்பட வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தியது.
இடதுமாற்று குறித்த விவாதம்அவசியம்
நவீன தாராளமயப் பொருளாதார பாதைக்கும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்ச னைகளுக்கும் தீர்வு காண்கிற வல்லமை இடது மாற்றுக்கு மட்டுமே என்பதை உறுதி படத் தெரிவித்துள்ள மாநாடு இதுகுறித்த விவாதங்கள் அறிவார்ந்த பகுதியினர் மத்தியில் நடந்தேற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்தார்.