மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சென்னை, ஜன. 6 - அரசியலமைப்புச் சட்டத் தையும், தமிழக சட்டமன்ற மரபையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்; ஒன்றிய அரசு அவரை, ஆளுநர் பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அரசியலமைப்புச் சட்டக் கடமையை மீறும் ஆளுநர்
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரை யுடன் துவங்குவது என்பது கடந்தகால மரபு அடிப்படையில் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று. இந்த சட்டப்பூர்வமான கடமை யை நிறைவேற்றாமல் இன்று ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் மரபை அவமதிப்பதா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைப்பது தான் மரபு. இந்த மரபை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை காலங்காலமாக பின்பற்றி வருகிறது. இந்த மரபுகளை மதிக்காம லும், ஆளுநருக்கு உள்ள கடமை களை நிறைவேற்றாமலும் ஒன்றிய பாஜக அரசு விரும்புகிற படி நடந்து கொள்வதை ஆளுநர் ஆர்.என். ரவி வழக்க மாகக் கொண்டுள்ளார். கடந்த காலங்களிலும் இதேபோல் அவர் சட்டமன்றத்திலிருந்து தொடர்ந்து அரசியல் உள்நோக்கத்துடன் வெளிநடப்பு செய்து வந்துள்ளதை தமிழக மக்கள் அறி வார்கள்.
ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்
எனவே, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கை யாகவும் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். அத்தகைய முடிவை ஆளுநர் எடுக்காவிட்டால் ஒன்றிய அரசு அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கும் அவரை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்று சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலி யுறுத்துகிறது. தமிழ்நாடு ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவான கண்டனக் குர லெழுப்பிட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.