மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பொறுப்பிலிருந்து விடைபெற்ற கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பெ. சண்முகம் ஆகியோருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இதற்காக முதலமைச்சருக்கு, கே. பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது சமூகவலைதளப் பக்கத்தில் கே. பாலகிருஷ்ணன் கூறியிருப்ப தாவது: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில், கட்சி யின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வாகியுள்ள தோழர் பெ. சண்முகம் அவர்களுக்கும், எனக்கும் வாழ்த்துக் கூறியுள்ள திமுக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவிக்கிறோம். சிபிஐ(எம்) மாநிலச் செயலாளராக நான் செயல்பட்ட 7 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்தவும் – தோழமைக் கட்சிகளோடு கலந்துரையாடி, சிறப்புமிக்க முடிவுகளை மேற்கொள்ளவும் முடிந்தது. இந்த உறுதியான அணி, தமிழ்நாட்டில் பாஜகவை 100 சதவிகிதம் வீழ்த்த வாய்ப்பாக அமைந்தது. இச்சிறப்பான கடமைகளை நிறை வேற்றும் பணியில், திமுக தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் தங்களோடு நெருங்கி பணி யாற்றவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை விவாதித்து மேற் கொள்ளவும் கிடைத்தது அரிய வாய்ப்பா கும். தங்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கட்சியின் மாநிலப் பொறுப்பு களில் இருந்து என்னை நான் விடு வித்துக் கொண்ட போதிலும், கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் என்ற முறையில் மக்கள் பணியிலும், மதச்சார்பற்ற சக்தி களை வலுப்படுத்தி பாசிச பாஜகவை வீழ்த்தி முடிக்கும் போராட்டத்திலும் தொடர்ந்து முன்நிற்பேன். தமிழ்நாட்டு மக்களின் நலனைக் காத்து நிற்கும் உறுதியான பயணம் மென்மேலும் வலுவுடன் தொட ரும் என தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற அர சியலை வலுப்படுத்தி, ஒட்டுமொத்த மக்கள் மேம்பாட்டுக்காக சிபிஐ(எம்) உறுதியோடு முன்னிற்கும். முதலமைச்சரின் அன்பான வாழ்த்துக்கு, சிபிஐ(எம்) சார்பில் மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்”. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.