tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி., நலமாக உள்ளார் – கே.பாலகிருஷ்ணன்

உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நலமாக உள்ளார் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் சிபிஎம் 24ஆவது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுக்கு இன்று(ஜன. 05) காலை லேசான படபடப்பு ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, பரிசோதனைகள் செய்யப்பட்டன. சில மணி நேரம் மருத்துவர் மேற்பார்வையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். நேரில் சென்று பார்த்தேன். நலமாக உள்ளார். மாலைக்குள் மாநாட்டுக்குத் திரும்புவார் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.