தஞ்சாவூர், ஜன.2- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலா ளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாலெட்சுமி சதீஸ்குமார் சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா ளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா.அண்ணா துரை, பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் ஆகி யோர் கலந்து கொண்டு, ஆனந்தவல்லி ஆற்றுக்கரை ஆட்டோ ஸ்டாண்டு, புதிய பேருந்து நிலையம் ஆட்டோ ஸ்டாண்டு ஆகிய இரு இடங்களிலும் 100 ஆட்டோ ஓட்டு நர்களுக்கு காய்கறித் தொகுப்பு மற்றும் போர்வை என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.