districts

img

மின்சிக்கனம்: விழிப்புணர்வு பேரணி

அவிநாசி,ஜன.4-   அவிநாசியில் மின்சிக்க னம் குறித்து விழிப்புணர்வு பேரணி புதிய பேருந்து  நிலையத்தில் வெள்ளி யன்று நடைபெற்றது. தேசியமின் சக்தி சிக்கன வார விழாவை முன்னிட்டு, அவி நாசி மின் பகிர்மான வட்டம், அவிநாசி மின் கோட்டத்தில் மின்  சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி பழைய பேருந்து நிலையம்  வழியாக மங்களம் சாலையில் உள்ள அவிநாசி மின்வாரிய  அலுவலகத்தில் நிறைவடைந்தது.  இந்த பேரணியை திருப்பூர் மின் பகிர்மான மேற்பார்வை  பொறியாளர் விஜயஈசுவரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மின் சிக்கனம் மற்றும் அவசியத்தை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மேலும், துண்டு பிரசுரங்கள்  வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், மின்கோட்ட  செயற்பொறியாளர் பரஞ்சோதி, உதவி மின் பொறியாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை அதேபோல் உடுமலை மின்வாரிய அலுவலகத்தில் துவங்கிய பேரணி திருப்பூர் ரோடு, தளி ரோடு பகுதி களில் பிரச்சாரம் செய்து குட்டைத்திடலில் முடிவுபெற்றது. இந்த பேரணியை உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார் வையாளர் கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில்  பலர் பங்கேற்றனர்.