அறந்தாங்கி, ஜன.2- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் பிறந்தநாள் முன்னிட்டு, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் ஏற்பாட்டில், அறந்தாங்கியை அடுத்த குன்னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச புத்தகப் பை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் கரு. அண்ணாத்துரை, குன்னூர் ஊராட்சி மன்றத் தலைவர், காளிமுத்து, துணை தலைவர் முத்து மற்றும் சிறுகவயல் நீலகண்டன், காங்கிரஸ் நிர்வாகிகள் காந்தி மற்றும் பொதுமக்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.