விழுப்புரம்,ஜனவரி.03- விக்கிரவாண்டியில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி செயிண்ட் மேரிஸ் பள்ளியில் கழிவுநீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மூடி உடைந்ததால் உள்ளே விழுந்து LKG படிக்கும் மூன்றரை வயது குழந்தை லியா உயிரிழப்பு.
பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதியினர் பள்ளியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து குழந்தையில் உடல் அரசு மருத்துவமனைக்கு உடற்க்கூராய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.