லாட்டரி சீட்டு விற்றவர் கைது
தஞ்சாவூர், ஜன.2 - பேராவூரணி அருகே, தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்றவரை பேராவூரணி காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்பனை நடைபெறுவ தாக, பேராவூரணி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில், காவலர்கள் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட மணிக்கட்டி பகுதியில் சந்தேகத்திற் கிடமான நிலையில் நின்றிருந்த இப்ராகிம் (46) என்ப வரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவரிடம் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 10 லாட்டரிச் சீட்டுகள் விற்பனைக்காக இருந்தது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம் தொகுதி கிராமங்களை மாநகராட்சி, பேரூராட்சியில் இணைப்பதை கைவிடுக!
ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்
பாபநாசம், ஜன.2- பாபநாசம் தொகுதி கிராமங்களை மாநகராட்சி, பேரூராட்சியில் இணைப்பதை கைவிட வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹி ருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, அம்மாப்பேட்டை ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியில் உள்ள அருள் மொழிப் பேட்டை கிராமம், புலவர்நத்தம் ஊராட்சி பவானியம்மாள்புரம் கிராமம் மற்றும் கத்தரிநத்தம் ஊராட்சி தளவாய்பாளையம் கிராமம் ஆகியவை தஞ்சாவூர் மாநக ராட்சியுடனும், கும்பகோணம் ஒன்றியம் வலையப்பேட்டை ஊராட்சி அம்மா பேட்டை, வலையப்பேட்டை ஆகிய கிரா மங்கள் கும்பகோணம் மாநகராட்சியுட னும், பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி ஊராட்சி, அய்யம்பேட்டை பேரூராட்சி யுடனும் இணைக்கப் படுவதாக புதிய ஆண்டில் வெளியாகியுள்ள அரசாணை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இந்த கிராம பொது மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துக் களை முறைப்படி கேட்காமல் வெளியிடப் பட்டுள்ள இந்த அறிவிப்புகள் இங்கு வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் இழப்பு, வரி விகிதங்கள் அதிகரிப்பு போன்ற இழப்பு களை இந்த கிராம மக்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (பேரூ-2) துறை அரசாணை நிலை எண் 205 மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை அர சாணை நிலை எண் 201 ஆகியவற்றிலிருந்து பாபநாசம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இந்த கிராமங்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.