districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

ஈரோடு, டிச.31- ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணி யாளர்களின் கோரிக்கை தொடர்பான பேச்சு வார்த்தை வருகின்ற 9 ஆம் தேதியன்று ஒத்தி வைக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளைக் கொண்டது. இங்கு பொது சுகாதாரப் பிரி வில் குறைவான நிரந்தரப்படுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நிரந்தரப்படுத்தப்படாத தூய்மைப் பணியா ளர்களும் பணியாற்றி வருகின்றனர். இத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், அர சாணைப்படி ஊதியம், தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கடந்த 26 ஆம் தேதியன்று வேலைநிறுத்தம் அறி விக்கப்பட்டது. இதுகுறித்து தொழிலாளர் துறை தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி யது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளுக்கு உடன்பாடு தெரிவிக் கப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை திங்களன்று நடைபெற்றது. அதில் நீதிமன்றம் ரத்து செய்த அரசா ணைப்படி ஊதியம் நிர்ணயிப்பதைக் கைவிடு கிறோம் என மாநகராட்சி சார்பில் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், சில கோரிக்கை கள் குறித்து வரும் 9 ஆம் தேதியன்று நடை பெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற் படும் என நம்புவதாகத் தொழிற்சங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறைக்கு உளவு சொல்பவர் கைது

தருமபுரி, டிச.31- பென்னாகரம் அருகே சிஐடி போலீஸ் என்று மிரட்டி பழங்குடியின பெண், சிறு மிக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் துறைக்கு உளவு சொல்பவர் கைது செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள இருளர் இன குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 2 பேர், போலீஸ் சிஐடி எனக்கூறி யுள்ளனர். அப்போது, ஒருவ ரது வீட்டிற்குள் நுழைத்து கணவனை கத்தியை காட்டி மிரட்டி, அவரது மனைவி மற்றும் அங்கிருந்த சிறு மிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதைய டுத்து அங்கிருந்த தப்பி யோட முயற்சித்த 2 பேரில், ஒருவரை அப்பகுதி பொது மக்கள் பிடித்து காவல் துறை யினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், இச்சம்ப வத்தில் ஈடுபட்டது பாலக் கோடு ரயில் நிலையம் பகு தியைச் சேர்ந்த ஜெய்க ணேஷ் (49) மற்றும் கக்கன்ஜி புரம் கிராமத்தைச் சேர்ந்த  சக்தி என்பதும், காவல் துறைக்கு உளவு சொல்பவர் கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, இரண்டு பேர்  மீதும் கொலை முயற்சி, ஆள் மாறாட்டம், பாலியல் தொல்லை உள்ளிட்ட 5 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்த னர். இதில் ஜெய்கணேஷை பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி யோடிய சக்தியை தேடி வரு கின்றனர். இதற்கிடையில், ஜெயகணேஷை தாக்கிய தாக இருளர் இன குடியிருப் பைச் சேர்ந்த கிராம மக்கள்  10 பேர் மீதும் போலீசார் வழக் குப்பதிந்துள்ளது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் உதவி மையம் திறப்பு

கோவை, டிச.31- கோவை மாவட்டம், சூலூர் சிந்தாமணிபுதூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் உதவி மையம் திறப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ் வில் பங்கேற்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கார்த்திகேயன், காவல் உதவி மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கருமத்தம்பட்டி காவல்  துறை துணை கண்காணிப்பா ளர் தங்கராமன், சூலூர் ஆய் வாளர் லெனின் அப்பாதுரை, பள்ளபாளையம் பேரூராட் சித் தலைவர் செல்வராஜ், திமுக துணைத்தலைவர் பி.கே.சாமிநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

பல்லடத்தை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி தீர்மானம்

பல்லடத்தை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி தீர்மானம் திருப்பூர், டிச.31- பல்லடம் முதல்நிலை நகராட்சியை தேர்வுநிலை நகராட்சி யாக தரம் உயர்த்த அரசுக்கு கருத்துரு அனுப்புவது என்று நகர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லடம் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நகராட்சித் தலை வர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில் திங்களன்று  நடைபெற்றது. இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில், பல்லடம் முதல் நிலை  நகராட்சியில் ஆறுமுத்தாம்பாளையம், மாணிக்காபுரம், வடு கபாளையம்புதூர் ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் இணைய உள்ளன. இதனால் பல்லடம் நகராட்சியின் மக்கள்  தொகை மற்றும் வருவாய் அதிகரிக்கும். இதனைக் கருத்தில்  கொண்டு பல்லடம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக  தரம் உயர்த்த வேண்டும். மங்கலம் சாலையில் புதிதாக கட்டப் பட்டுள்ள ரூ.2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டி வளாக நுழைவாயிலிக்கு “கலைஞர்  நூற்றாண்டு விழா நினைவு நீர்த்தேக்க தொட்டி வளாகம்” என்று பெயர்ப்பலகை அமைத்தல், ரூ.1 லட்சம் செலவில் குடி நீர் அளவுமானி அமைப்பது, பல்லடம் முதல்நிலை நகராட் சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசுக்கு  கருத்துரு அனுப்புவது உட்பட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு அவிநாசி, டிச.31- சேவூரில்  ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் திங்களன்று  உயிரிழந்தார். சேவூர் தேவேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் (77) . இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார். அப்போது பற்ற  வைத்திருந்த கொசுவர்த்தி, போர்வையில் பட்டு, தீ விபத்து  ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்து புகை வருவதை யறிந்த, மகள் லட்சுமி வெளியே வந்து பார்த்தபோது, நாகம் மாள் தீ விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்திருப்பது தெரி யவந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் நாகம் மாளை மீட்டு, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பரிசோதனை மேற்கொண்ட மருத்து வர்கள்  நாகம்மாள் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்த னர். இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநில நெடுஞ்சாலையில் பேருந்துகள் பற்றாக்குறை: அவதிக்குள்ளாகும் கிராமப்புற மக்கள்

திருப்பூர், டிச.31- பல்லடம் - உடுமலை வழித்தடத்தில் மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையிலும், போது மான பேருந்துகள் இயக்கப்படுவ தில்லை. இப்பகுதி மக்களின் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு கூடுதல்  பேருந்துகளை இயக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பல்லடம் - உடுமலைப்பேட்டை வழித்தடத்தில், 50க்கும் மேற்பட்ட கிரா மங்கள் உள்ளன. மேலும், இவ்வழியில்,  நூற்பாலைகள், பனியன் நிறுவனங் கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் ஆகி யவற்றுக்கு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்க ளுக்கு போதுமான நகரப் பேருந்து வசதி  இல்லை. குறிப்பிட்ட கால அவகாசத் தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்ப டுகின்றன. இதனால் காலை நேரங்க ளில் பள்ளிகளுக்கு வரும் மாணவ,  மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகின்றனர். மேலும், நகரப் பேருந்து கள் இல்லாததால், திருப்பூர் செல்லும் விரைவு பேருந்துகளில் பயணிக்க வேண்டியுள்ளது. மேலும், ஒரு சில கிரா மங்களில்  அரசு விரைவு பேருந்துகள்  நிற்காமல் செல்வதால் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம், நீதிமன்றம் உள் ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு தினந் தோறும் வந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.  பல்லடம் - உடுமலைப்பேட்டை சாலை மாநில நெடுஞ்சாலையாக தரம்  உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப் பட்டது. ஆனால், போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. கூடுதல் பேருந்துகளை இயக்க மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத் ததை அடுத்து, உடுமலையில் இருந்து பாயின்ட் டூ பாயின்ட் பேருந்துகள் திருப் பூருக்கு இயக்கப்பட்டுள்ளன. இப்பே ருந்துகளும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பல்லடம் பேருந்து நிலை யம் ஆகிய இடங்களில் மட்டுமே நிறுத்தப் படுகிறது. பல கிராமங்களில் பேருந்து கள் நின்று செல்வதில்லை. மேலும்,  உடுமலைப்பேட்டையில் இருந்து திருப் பூருக்கு கடைசி பேருந்து இரவு 9.50 மணிக்கு இயக்கப்படுகிறது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத் தில் கொண்டு இவ்வழித்தடதில் கூடுதல்  பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

பேருந்து மோதி  தொழிலாளி உயிரிழப்பு

அவிநாசி, டிச.31- அவிநாசி அருகே  இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து  மோதி விபத்துக்குள்ளானதில், திங்களன்று கட்டடத் தொழி லாளி உயிரிழந்தார். கோவை மாவட்டம், அன்னூர் காக்காபாளையம் பகு தியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (59). கட்டடத் தொழிலாளி. இவர்  சேவூர் அருகே  கருமாபாளையம் நோக்கி இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோபி - அந்தியூ ரில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார்  பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது  மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ் வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்.

மின்சார வாரிய அதிகாரியிடம் ரூ.8.30 லட்சம் மோசடி!

மின்சார வாரிய அதிகாரியிடம் ரூ.8.30 லட்சம் மோசடி! கோவை, டிச.31- ஆன்லைன் முதலீட்டில் லாபம் எனக் கூறி தமிழ்நாடு மின் சார வாரிய உதவி செயற்பொறியாளரிடம் ரூ 8.30 லட்சம்  மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை மாவட்டம், கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்த வர் கார்த்திகேயன் (47). முதுகலை பொறியியல் பட்டதாரி யான இவர். கடந்த 27 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது கோவை மாவட்டத் தில் மின் வாரிய உதவி செயற்பொறியாளராக பணியாற்றி  வரும் கார்த்திகேயனுக்கு கடந்த அக் 24 ஆம் தேதியன்று செல்போனில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஸ்பீடு இ.எக்ஸ் குளோபல் என்ற நிறுவனத்தில் ஆன்லைன் மூலம்  முதலீடு செய்தால் அதிகளவு லாபம் ஈட்டலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. பல்வேறு விசாரணைக்கு பிறகு அதனை நம்பிய கார்த்திகேயன் 14 தவணைகளில் சுமார் ரூ.8.30  லட்சத்தை வங்கி கணக்கின் மூலம் அனுப்பி உள்ளார். அதன் பின்னர் அவர்கள் வாக்குறுதி கொடுத்தது போல்  லாபம் ஏதும் வராமலும், முதலீடு செய்த பணத்தை யும் திருப்பித் தராமலும் இருந்துள்ளனர். இதனால் சந்தேக மடைந்த அவர் தான் முதலீடு செய்த பணத்தை மட்டும் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால்,  அதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என  அந்நிறுவனத்தினர் கேட்டதால், சந்தேகம் அடைந்த கார்த்தி கேயன் திங்களன்று கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் முதலீடு, வெளிநாட்டு வேலை, மேலும் நீதிபதி கள், போலீஸ் அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் என ஆன் லைன் மூலம் யாராவது பேசினால் அவர்களை நம்ப வேண் டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

போதை மாத்திரை விற்பனை 2 பேர் கைது

கோவை, டிச.31- குனியமுத்தூரில் கஞ்சா,  போதை மாத்திரை விற்பனை  செய்த இளைஞர்களை காவல் துறையினர் கைது  செய்து, சிறையில் அடைத் தனர். கோவை, குனியமுத் தூர் பகுதியில் உள்ள தனி யார் கல்லூரி அருகே கஞ்சா  விற்பனை நடப்பதாக போலீ சாருக்கு திங்களன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  மருதம்மாள் தலைமையி லான போலீசார் திடீரென அங்கு சென்று ஆய்வு மேற் கொண்டனர். அப்போது சந் தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது,  அவர்களிடம் சிறு பொட்ட லங்களாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகி யவற்றை வைத்திருந்தது தெரியவந்தது. இதைய டுத்து பிடிபட்ட நபர்களை காவல் நிலையம் அழைத்து  சென்று விசாரித்தனர். அப் போது அவர்கள் குனிய முத்தூர் சுகுணாபுரம் பகுதி யைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (23), வடவள்ளியை சேர்ந்த  வினித் (27) என்பது தெரி யவந்தது. இதையடுத்து இரு வரையும் கைது செய்த போலீ சார் அவர்களிடம் இருந்து 75  கிராம் கஞ்சா, 100 போதை  மாத்திரைகள் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர். மேலும்  கைது செய்யப்பட்ட இரு வரையும் செவ்வாயன்று போலீசார் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய  சிறையில் அடைத்தனர்.

வணிகர் சங்கத்தினர் கடையடைப்புக்கு  விவசாயிகள் சங்கம் ஆதரவு

கோபி, டிச.31- ஒன்றிய பாஜக தலைமையிலான அரசின் வணிக வாடகை கட்டங்களுக்கு 18 ஜிஎஸ்டியை கண்டித்து கோபியில் அனைத்து வணிகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், கொடிவேரி பாசன  விவசாயிகள் சங்கத்தினர் இப்போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அனைத்து வணிகர் சங்கங்  கள் சார்பில் கடை அடைப்பு போராட்டம்  தொடர்பான ஆலோசனை கூட்டம் திங்க ளன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு சங்க தலைவர் வேலுமணி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஒவ்வொரு வருடமும் 6 சதவீத வரியேற் றம் என்பதை உடனடியாக ரத்து செய்து  பழைய வரிகளையே வசூலிக்க ஆவ ணம் செய்ய வேண்டும். நகராட்சியில் டிரேட் லைசென்ஸ் என்ற பெயரில் வருடா வருடம் வணிகர்களுக்கு ஆயி ரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை  கட்டணம் விதித்து இருப்பதை ஒரே மாதிரியாக குறைந்தபட்ச தொகை யாக விதிக்க வேண்டும். மின்சாரவாரி யத்தினால் 2024 ஜூலை மாதம் வணிகர் கள் பயன்படுத்தும் மும்முனை இணைப்புகளுக்கு முன்னறிவிப்பு செய் யாமல் ரூ1000 முதல் ரூ.25 ஆயிரம் வரை வரி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத் தொகையை ரத்து செய்து உடனடி யாக கணக்கில் இருப்பு வைத்து கொள்ள வேண்டும். ஒன்றிய மாநில அர சுகளின் வருவாய்க்கு கடை மற்றும் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி 18 சதவி தம் என்பதை மறுபரிசீலனை செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜன.3 ஆம் தேதி யன்று கோபியில் ஒருநாள் கடைய டைப்பு போராட்டத்தை 100 சதவீதம்  நடைபெற வலியுறுத்துவது என முடிவு  செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  இக்கூட்டத்தில் கொடிவேரி பாசன விவ சாயிகள் சங்கத்தினர் வணிகர் சங்க  கடையடைபிற்கு முழு ஆதரவு  அளிப்பது என தெரிவித்தனர்.