districts

img

போனஸ் கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.31- 20 சதவிகிதம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், என வலியுறுத்தி விசைத்தறி தொழிலா ளர்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் செயல் பட்டு வரும் நிலையில், இத்தொ ழிலை நம்பி ஏராளமான விசைத் தறி தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், விசைத் தறி தொழிலாளர்களுக்கு பொங் கல் போனஸ் தொடர்பாக கடந்த அக்.2 ஆம் தேதியன்று சிஐடியு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் குமாரபாளையத்தில் நடை பெற்றது. இதில், 20 சதவிகிதம் பொங்கல் போனசை, 15 நாட்க ளுக்கு முன்பாகவே தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டும் என  முடிவு செய்யப்பட்டு, விசைத்தறி  உரிமையாளர்களும், தொழிலாளர் துறை அதிகாரிகளும் சந்தித்து  முறையிடுவது என முடிவு எடுக் கப்பட்டது. அதனடிப்படையில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு விரைந்து பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், என வலியுறுத்தி சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் திங்களன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் ஆனங்கூர் பிரிவு சாலை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விசைத்தறி தொழிலாளர் கள் சங்க நகரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சிபிஎம் நகரச் செயலாளர் கந்தசாமி வாழ்த்திப் பேசினார். இதில் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் எம்.அசோகன், மாவட்டத் தலைவர் கே.மோகன், நகரச் செயலாளர் பாலுச்சாமி, சிஐ டியு மாவட்டக்குழு உறுப்பினர்கள் தனபால், வெங்கடாசலம், நகரப் பொருளாளர் வெங்கடேசன், மாநில சம்மேளனக்குழு உறுப்பி னர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.