articles

img

புதிய ஆண்டிலேனும் மனித நேயம் வெல்லட்டும்! - பேரா.விஜய் பிரசாத்

நமது உலகம் இன்று வலியால் துடிக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படு கொலை, ஆப்பிரிக்காவின் மோதல்கள் என மனித குலம் பெரும் சோதனையை எதிர்கொள்கிறது. ஆயுத நிறுவனங்களின் லாபம் பெருகும் அதே வேளையில், ஏழை மக்களின் வாழ்வு சிதைகிறது. இந்த கொடூரங்களை கண்டும் காணாமல் இருக்கும் உல கத்தில், சில குரல்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றன.

“எதிர்த்திடுங்கள்” - ஒரு வீர கவிதை 

2015ம் ஆண்டு, பாலஸ்தீனக் கவிஞர் டேரீன் டாட்டூர்
எழுதிய “குவிம் யா ஷா’பி, குவிம் ஹும்” (எதிர்த்தி
டுங்கள், எனது மக்களே அவர்களை எதிர்த்திடுங்கள்) என்ற கவிதைக்காக சிறையில் அடைக்கப்பட்டார். இதோ அந்த வீர கவிதை:  
எதிர்த்திடுங்கள், எனது மக்களே, அவர்களை எதிர்த்திடுங்கள்.   
ஜெருசலத்தில், எனது காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டு    
எனது துயரங்களை கடவுளின் காதுகளில் ஓதினேன்.   
அராபிய பாலஸ்தீனத்திற்கான ஆன்மாவை    
எனது உள்ளங்கைகளில் ஏந்திச் சென்றேன்.  

எனது தாயகத்திலிருந்து அவர்களை வெளியேற்றி,    
அதற்கடுத்து வரும் நாட்களில் அவர்களை மண்டியிடச் செய்யும் வரை   
‘அமைதியான தீர்வுக்கு’ நான் அடிபணிய மாட்
டேன்,   
-எனது கொடிகளை ஒருபோதும் தாழவிடேன்.   
 
எதிர்த்திடுங்கள், எனது மக்களே, அவர்களை எதிர்த்திடுங்கள்.  
குடியேறியவர்களின் கொள்ளைகளை எதிர்த்தி
டுங்கள்.  
தியாகிகளின் பல்லக்குகளை பின்தொடர்ந்து செல்லுங்கள்.  
அவமானத்தை இடைவிடாது திணித்து,   
உரிமைகளை மீண்டும் நாம் பெறுவதிலிருந்து நம்மை தடுத்திட்ட  
வெறுக்கத்தக்க அமைப்பை சிதறச் செய்யுங்கள்.  
 
எந்த குற்றத்தையும் செய்யாத குழந்தைகளை அவர்கள் எரித்தனர்.  
ஹதீலைப் பொறுத்தவரை, அவர்கள் பகிரங்கமாக   
பட்டப்பகலில் அவளை சுட்டுக் கொன்றனர்.  
 
எதிர்த்திடுங்கள், எனது மக்களே, எதிர்த்திடுங்கள்.  
காலனியவாதிகளின் தாக்குதலை எதிர்த்திடுங்கள்.  
 
அமைதி என்னும் மாயைகளைக் கொண்டு நம்மை
கட்டிப் போட்டு  
நம்மிடையே உள்ள அவர்களது பிரதிநிதிகளை கண்டுகொள்ளாதீர்கள்.  
மெர்க்காவாவைக் கண்டு பயப்பட வேண்டாம்.  
 
ராணுவத்தின் திடீர் தாக்குதல்களை எதிர்கொண்டு   
வெற்றிகளைக் கண்ட நிலத்திலிருந்து   
நீங்கள் எதிர்க்கும் வரை   
உங்களது இதயத்தில் உள்ள உண்மை வலிமை மிக்கது.  
 
தனது கல்லறையிலிருந்து அலி அழைக்கிறார்  
எதிர்த்திடுங்கள், கிளர்ச்சியில் கலந்து கொள்ளும் எனது மக்களே,  
எனது மிச்சங்களுக்கு விடையாக   
நீங்கள் ஆகிவிட்டீர்கள் என்பதை குறிப்பிட்டு   
அகர் மரத்தின் மீது என்னை உரைநடையாக எழுதுங்கள்.  
 
எதிர்த்திடுங்கள், எனது மக்களே, அவர்களை எதிர்த்திடுங்கள்.  
எதிர்த்திடுங்கள், எனது மக்களே, அவர்களை எதிர்த்திடுங்கள்.

 ஹதீலின் கதை

கவிதையில் குறிப்பிடப்பட்ட ஹதீல், 2015ம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று இஸ்ரேலிய படையால் கொல்லப்பட்டார். ஹெப்ரானின் அல்-ஷுஹதா தெருவில் உள்ள சோதனைச் சாவடியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியது.  ஹதீல் தனது கைப்பையைக் காட்டிய போது, அதில் அலைபேசி, பேனா, பென்சில் பெட்டி போன்ற அன்றாட பொருட்களே இருந்தன. ஆனால் படைவீரர்கள் அவரை சுற்றி வளைத்து, முதலில் காலிலும், பின்னர் மார்பிலும் சுட்டனர். இந்த கொடூர தாக்குதலில் ஹதீல் உயிரிழந்தார்.

நஜியின் கனவுகள் 

2024 நவம்பர் 3 அன்று, 14 வயது நஜி அல்-பாபா தனது தந்தையுடன் மதிய உணவு உண்டு விட்டு கால்பந்து விளையாட சென்றான். தனது தாத்தாவின் கடைக்கு அருகில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, இஸ்ரேலிய படையினர் அவனை சுட்டுக் கொன்றனர்.  நஜி, ரொனால்டோ போல ஒரு சர்வதேச கால்பந்து வீரராக வேண்டும் என கனவு கண்டான். ஆனால் அந்த கனவை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சிதைத்தது.

எதிர்காலத்திற்கான நம்பிக்கை

கனவுகளை சிதைக்கும் இந்த கொடூரங்கள் ஒரு நாள் முடிவுக்கு வர வேண்டும். போர், ஆக்கிரமிப்பு, முத லாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பிடியிலி ருந்து மனிதகுலம் விடுபட வேண்டும். நஜி, ஹதீல் போன்ற இளம் உயிர்கள் வீணாகாத ஒரு சமூகத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.  புதிய ஆண்டு மனிதநேயத்தின் வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லட்டும்.  மூலம் : மன்த்லி ரெவ்யூ  தமிழில் சுருக்கம் : எம்.கிரிஜா