விழுப்புரம், ஜன.3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டையொட்டி விழுப்புரத்தில் வெள்ளியன்று (ஜன.3) நடைபெற்ற செந்தொண்டர் அணிவகுப்பில் பங்கேற்ற தோழர் ஜி.ஆனந்தன் மயக்கமடைந்து உயிரிழந்தார். மின்னரங்க ஊழியரான ஜி.ஆனந்தன், பல்லாவரம் பகுதியில் கட்சி உறுப்பினராக செயல்பட்டு வந்தார். முன்னணி ஊழியரான அவர் செந்தொண்டர்களோடு அணிவகுத்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கட்சி ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். தோழர் ஜி.ஆனந்தன் மறைவுக்கு கட்சியின் மாவட்ட, மாநிலத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.