world

img

2025 புதிய துவக்கமாக மாற்றுவோம் : ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெஸ் அழைப்பு

2024 வருடத்தின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று ஐ.நா அவையின் பொ துச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில் 2025 வருடத்தை “ஒரு புதிய தொடக்கமாக” மாற்ற அழைப்பு விடுத்துள்ளார். குட்டரெஸ் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் தெரிவித்துள்ளதாவது; 2024 வருடம் முழுவதும் நம்பிக்கையை கண்டுபிடிப்பதே கடினமாக இருந்தது. போர்கள் மிகப்பெரிய வலியையும், துன்பத்தையும், இடப் பெயர்வையும் ஏற்படுத்துகின்றன. ஏற்றத்தாழ்வுகளும், பிளவுகளும் நிறைந்துள்ளன. இவை பதற்றங்கள் மற்றும் அவநம்பிக்கையையே ஏற்படுத்தியது.  உலகம் கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமான வெப்பமான காலநிலையை எதிர்கொண்டு வருகிறது. 2024 உட்பட கடந்த 10 ஆண்டுகளுக்கும் அதிகமான வெப்பம் பதிவான ஆண்டுகளாக உள்ளன.  நமது நிகழ்காலத்தில் மிகப்பெரிய காலநிலை சிதைவை சந்தித்து வருகிறோம். இனிமேலும் எதையும் இழக்க நமக்கு நேரம் இல்லை. இந்த அழிவுப்பாதையை நாம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். வியத்தகு முறையில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் மூலமும்,  புதுப்பிக்கத்தக்க மாற்று ஆற்றல் வளங்களை பயன்படுத்துவதன் மூலம் உலகை பாதுகாப்பான பாதை யில் கொண்டு செல்லவேண்டும். இது அவசியமானது மற்றும் சாத்தியமானது எனவும்  உலக நாடுகளுக்கு குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.  கொடிய இருண்ட நாட்களில் கூட ‘நம்பிக்கை’ ஒரு மாற்றத்தை கொடுத்ததை நான் பார்த்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள அவர், நல்ல மாற்றத்திற்காக குரல் கொடுக்கும் ஆர்வலர்களையும், அதிகம் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவளிக்க மகத்தான தடைகளைத் தாண்டி மனிதாபிமான உதவிகளை செய்து வரும் நாயகர்க ளையும் தனது வாழ்த்துச் செய்தியில் பாராட்டினார். காலநிலை மாற்றத்திற்கு எதிராகவும், நிதி உரி மைக்காகவும் வளரும் நாடுகள் செய்யும் போராட்டம் மீது  நம்பிக்கை இருக்கிறது என அவர் தனது வாழ்த்துச் செய்தி யில் பேசியுள்ளார். 2025 இல் என்ன நடக்கப்போகிறது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் அனைத்து மக்க ளுக்கும் மிகவும் அமைதியான, சமமான, நிலையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க உழைக்கும் அனைவருடனும் நான் நிற்பேன் என உறுதியளிக்கிறேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து 2025 ஐ ஒரு புதிய துவக்கமாக மாற்ற முடியும். இந்த புதிய துவக்கம் என்பது உலக நாடுகளை பிளவுபடுத்துவது அல்ல அனைத்து நாடு களையும் ஒன்றிணைக்கும் துவக்கம் என தெரிவித் துள்ளார்.