districts

img

உபரிநீரை ஏரி, குளங்களில் நிரப்படுக: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.31- பவானிசாகர் அணைகளின் உபரி நீரை கொண்டு ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கட்சி யினர் அந்தியூரில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர், பவானிசாகர் அணைக ளின் உபரி நீரை அந்தியூர் வட்டாரத் தில் இருக்கும் ஏரி, குளங்களை கொண்டு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தோணி மடுவு தடுப்பணை திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். அந்தியூர் நகரம் மற்றும் தாலுகா பகுதியில் தினசரி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீர மைக்க வேண்டும். பர்கூர் மலையில் வசிக்கும் மலையாளி மக்களுக்கு பழங்குடி சாதி சான்று வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  அந்தியூர் தாலுகா குழு உறுப் பினர் ஏ.கே.பழனிச்சாமி ஆர்ப்பாட் டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.விஜயராகவன், எஸ்.வி.மாரி முத்து, தாலுகா செயலாளர் ஆர்.முரு கேசன், தாலுகா குழு உறுப்பினர் எஸ்.செபாஸ்டியன், முன்னாள் தாலுகா குழு உறுப்பினர் ஆர்.கந்த சாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில துணைச் செயலாளர் எல்.பர மேஸ்வரன் ஆகியோர் உரையாற்றி னர். இதில் திரளானோர் பங்கேற்ற னர். முடிவில், தாலுகாக்குழு உறுப்பி னர் ஆர்.மணிகண்டன் நன்றி கூறி னார்.