பாலஸ்தீனர்களை சிறையில் படுகொலை செய்யும் இஸ்ரேல்
டிசம்பர் 30 அன்று 5 பாலஸ்தீனர்களை தனது மிரு கத்தனமான சிறையில் படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். கைதிகளுக்கு எதிராக இழைக்கப் பட்ட பல குற்றங்களுக்கு இஸ்ரேல் சிறைச்சாலை நிர் வாகமே பொறுப்பு என பாலஸ்தீன பத்திரிகையாளர் கள் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.மேலும் இஸ்ரேல் சிறைச் சாலையில் மனிதாபிமான பேரழிவு அதிகரித்து வருகிறது என எச்சரித்ததுடன் இஸ்ரேல் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல பாலஸ்தீனர்களை பகிரங்க மாக படுகொலை செய்யும் வேலைகளையும் செய்கின் றனர் என பத்திரிகையாளர்கள் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
‘இஸ்ரேலை மருத்துவர்கள் தனிமைப்படுத்த வேண்டும்’
உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் இஸ் ரேலை தனிமைப்படுத்த அழைப்பு விடுத்துள் ளனர். காசாவின் ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பை அழித்ததற்காக உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள் இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளை யும் துண்டிக்க வேண்டும் என பாலஸ்தீனத்திற்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் அழைப்பு விடுத்துள்ளார். கமால் அத்வான் மருத்துவமனையில் குண்டுவீசி தீ வைத்து மருத்துவர் கள் மற்றும் நோயாளிகளை நிர்வாணமாக்கி இஸ்ரேல் கொடுமைப்படுத்தி படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
2024 இல் அமெரிக்காவில் அதிக வேலை நிறுத்தங்கள்
அமெரிக்கா 2024 இல் அதிக தொழிலாளர் போராட்டங்களை சந்தித்துள்ளது. தொழி லாளர் போராட்டங்களின் தரவுத்தளமான கார் னெல் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் இண்டஸ்ட்ரி யல் அண்ட் லேபர் ரிலேஷன்ஸ், லேபர் ஆக்ஷன் தரவுகளின்படி நாடு முழுவதும் 515 இடங்களில் 334 தொழிலாளர் போராட்டங்கள் நடந்துள் ளன. 5,000 க்கும் அதிகமான ஸ்டார்பக்ஸ் தொ ழிலாளர்கள் 45 மாநிலங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய போராட்டம் முக்கிய போராட்டமாக கவனம் பெற்றுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா கைதிகள் பரிமாற்றம்
ஐக்கிய அரபு அமீரகம் மூலமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்யா - உக் ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம் நடந்துள் ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இரு தரப்பிலி ருந்தும் சுமார் 150 போர்க் கைதிகளை பரிமாற்றம் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளது. கைதிகள் பரி மாற்றத்திற்குப் பிறகு அவ்வீரர்களுக்கு தேவை யான உளவியல் மற்றும் மருத்துவ சிகிச்சை வழங் கப்படுகிறது. மேலும் வீரர்கள் தங்களின் குடும்பங் களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மோசமான பேரழிவுகளில் 2000 பேர் பலி
2024 இல் உலகம் முழுவதும் நடந்த மோசமான 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் 288 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கிறிஸ்டியன் எய்ட் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் 4, ஐரோப்பிய நாடுகளில் 3 பேரழிவு சம்பவங்களும் சீனா, பிரேசில், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த10 பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையே அதிகரிக்கும் பதற்றம்
காபூல்/இஸ்லாமாபாத்,டிச.31- பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லையில் நேரடிப் போர் மூலம் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தெஹ்ரீக்-இ-தலி பான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாதிகள் குழு அந்நாட்டின் அருகில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்து இயங்கி வரு கின்றன. இந்த பயங்கரவாத அமைப்பால் பாகிஸ் தானிற்குள் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்கு தல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. டிசம்பர் 21 அன்று இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் படுகொலையாகினர். இதனைத் தொ டர்ந்து பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ் தான் எல்லைக்குள் ஊடுருவிச் சென்று எல்லைப் பகுதியில் அமைந்துள்ள 7 கிராமங்களில் இருந்த பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகளில் குண்டு களை வீசியது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ் தானை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவா திகள் என சுமார் 46 பேர் படுகொலையானார்கள். இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலை நடத்துவோம் என அறிவித்திருந்த தலிபான் அரசு பாகிஸ்தான் எல்லைப்படை வீரர்கள் மீது டிசம்பர் 28 அன்று தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணு வத்தின் சில எல்லை கண்காணிப்பு நிலைகளின் மீது தீ வைத்துச் சென்றது. இந்தத் தாக்குதலில் சுமார் 19 ராணுவ வீரர்கள் படுகொலையானார்கள். கடந்த காலத்தில் அமெரிக்க ராணுவம் ஆப்கா னிஸ்தானை ஆக்கிரமித்திருந்த போது தலிபான் மூத்த தலைவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது. (தலிபான்களின் பயங்கரவாதத்தை வளர்த்த அமெரிக்காவும் அதன் உளவு அமைப்பு களும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது) ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பதவி யேற்றதும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் தான் முதல் நபராக வாழ்த்து தெரிவித்தார். எனினும் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ் தான், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லைப் பிரச்சனை மிகப்பெரிய அளவில் வெடித்திருக்கி றது. இதன் காரணமாக இரு நாடுகளின் ராணுவ மும் அடிக்கடி எல்லையில் கடுமையாக சண்டை யிட்டுக் கொள்கின்றன. தற்போது இரு நாட்டு எல்லைப் பகுதியான கோஸ்காரி, மதா சன்கர், கோட் ரகா, தாரி மெங் கல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம், தலிபான் வீரர்களுக்கு இடையே தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளி யாகி வருகின்றன. சண்டை தீவிரமாகியுள்ள நிலையில் ஆப்கா னிஸ்தான் அரசு தனது தலிபான் வீரர்களை தொடர்ந்து எல்லையில் குவித்து வருகின்றது. இது பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடை யிலான நேரடிப் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.