இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன கால்பந்து வீரர் உயிரிழந்தார்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் தொடர்ந்து தங்களது எல்லையை விரிவாக்கம் செய்யும் வகையில் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையால் காசாவில் கடுமையான பஞ்சம் நிலவுகிறது.நிவாரண முகாமில் காத்திருப்பவர்கள் மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனிய பீலே என ரசிகர்களால் அழைக்கப்பட்ட கால்பந்து வீரர் சுலைமான் அல்—ஓபெய்த், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
நிவாரண முகாமில் சுலைமான் காத்திருந்த போது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக பாலஸ்தீனிய கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.