world

img

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து - 18 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு போகாராவிலிருந்து காத்மாண்டு நோக்கி 44 பயணிகளுடன் பேருந்து ஒன்று பிரிதிவி நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தது. நள்ளிரவு 1.30 மணி அளவில் தாடிங் மாவட்டத்தின் பைசி கெளடா பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திரிசூலி ஆற்றில் கவிழ்ந்தது.
விபத்து தகவல் அறிந்ததும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, நீண்ட நேரம் போராடி மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 2 வெளிநாட்டு பயணிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேபாள ராணுவம் மற்றும் ஆயுதப்படை போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் மூழ்கியவர்களை தேட சிறப்பு நீர்மூழ்கி வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.