world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்கப் பணம் நிறுத்தம்:  உக்ரைன் திட்டங்கள் முடக்கம் 

வெளிநாடுகளுக்கான பண உதவியை அமெரிக்கா நிறுத்தியதால் பல திட்டங்கள் அமலாக்கத்தை நிறுத்திவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு வெளிநாடுகளுக்கு அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் இருந்து செய்யும் உதவிகளை நிறுத்த உத்தரவிட்டார். இதனால் பெருமளவு அமெரிக்காவை சார்ந்து இருந்து வந்த உக்ரைனில் தற்போது ராணுவம், மின் உற்பத்தி என பல துறைகள் நெருக்கடிகளை சந்தித்துள்ளன.

90 லட்சம் எத்தியோப்பியக்  குழந்தைகள் பள்ளி செல்லவில்லை 

90 லட்சத்துக்கும் அதிகமான எத்தியோப்பியக் குழந்தைகள் தற்போது பள்ளிக்கு செல்ல முடியாத சூழலில் உள்ளனர். அந்நாட்டில் நடக்கும் ஆயுதச் சண்டைகள், இயற்கைப் பேரழிவுகள், பொ ருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றின்  காரணமாக லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2023 கணக்கின்படி அந்நாட்டில் 35,444,482 குழந் தைகள் பள்ளி செல்லும் வயதுடையவர்கள். எனினும் 22,949,597 குழந்தைகள் மட்டுமே பள்ளிகளில் சேர்க் கப்பட்டனர்.  மேலும் 35 சதவீதமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிஎன்என் செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளர்கள் பணிநீக்கம்

சிஎன்என் ( CNN ) செய்தி நிறுவனம்  கிட்டத்தட்ட  210  பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்நிறுவனம் தொலைக்காட்சி ஊடகத்தை குறைத்து விட்டு  டிஜிட்டல் பதிப்புகளில் கவனத்தை அதிகரிக்க உள்ளதாகவும் இதற்காக சுமார்  70 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் தாம்சன் பணியாளர்க ளுக்கு அனுப்பிய செய்தியில் பணியாளர்களின் எண் ணிக்கை “அதிகமாக” குறையும் என்று எதிர்பார்க்க வில்லை என போலிக் கண்ணீர் வடித்துள்ளார்.

டிரம்ப்பின் வால் பிடித்து  நடக்கும் ஜேவியர் மிலெய் 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கையெழுத்திட்ட பிறகு அர்ஜெண்டின ஜனாதிபதி ஜேவியர் மிலெய்யும் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர வலதுசாரியும் அமெரிக்காவின் தீவிர ஆதரவாளருமான ஜேவியர் மிலெய் தொடர்ந்து அமெரிக்க ஆதரவு நவீனதாராளமய வலதுசாரிக் கொள்கைகளை செயல்படுத்தி அர்ஜெண்டினா மக்களைச் சுரண்டி மோசமான பொருளாதாரச் சூழலில் தள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலை பிரதமருக்கு  அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு 

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய் யும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகுவை 2025 பிப்ரவரி 4 அன்று அமெரிக்கா விற்கு வருமாறு டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத் துள்ளார். இஸ்ரேலின் இனப் படுகொலைக்கு அமெ ரிக்கா தொடர்ந்து ஆதரவையும் உதவிகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கா வருமாறு நேதன்யா குவிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். நேதன்யாகு வும் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.