பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மக்களை ஒடுக்குவதற்கும், சுரண்டுவதற்கும், அடிமைப்படுத்துவதற்கும், தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கும் நிலப்பிரபுத் துவ காலத்திய ஊர்க் கட்டுப்பாடு என்பதை வைத்து எண்ணற்ற கொடுமைகளை ஏழை எளிய மக்கள் மீது தொடர்ச்சியாக செய்து வந்தார்கள். அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவே, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு அடிப்படை உரிமைகளை வழங்கி யது. ஆனால் அரசியலமைப்புச் சட்டம் உரு வாகி ஏறக்குறைய 75 ஆண்டுகள் ஆன பின்னும் கூட ஊர்க் கட்டுப்பாடு என்ற ஸ்தாப னம் சாதி ஆதிக்க வெறியர்களால் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.
ஊரை விட்டு ஒதுக்கல்...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வாணிப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது கொரப்பநாயக்கன்பட்டி கிராமம். இங்கே கடந்த 2014 ஆம் ஆண்டு கோயில் நிலத்தகராறில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவி செய்ததற் காக கிருஷ்ணன், அவரது தம்பி சசிகுமார் ஆகிய இருவரையும் பல ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு யாரும் ஊரில் பெண் தரக்கூடாது; பிற சாதியினரும் இந்த ஊரில் பெண் எடுக்கக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதன் விளைவாக 50 வயது நெருங்கிய அண்ணன் கிருஷ்ணனுக்கு திரு மணம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய்விட்ட தாக அவரது தம்பி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர்களை ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒதுக்கி வைத்து அவர்களது வாழ்க்கையையே அழித்துள்ளார்கள். முடிவெட்டவும்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புது சத்திரம் அருகே உள்ள திருமலைபட்டியில் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த அருள் பாண்டியன், அவரது இரண்டு குழந்தைகளுக்கு முடி திருத்தம் செய்ய சலூனுக்குச் சென்றுள்ளார். அப்போது, சலூன் கடை உரிமையாளர் முத்து என்பவர், பட்டியலின மக்களுக்கு முடி வெட்டக்கூடாது என்பது ஊர்க் கட்டுப்பாடு என்றும், இது 18 பட்டியின் கட்டுப்பாடு என்றும் கூறி முடி திருத்தம் செய்யாமல் அனுப்பி யுள்ளார். அதன் பிறகு அருள் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் முத்து கைது செய்யப்பட்டார். ஆனாலும் ஊர்க் கட்டுப்பாடு என்ன ஆயிற்று என்று இதுவரையிலும் யாருக்கும் தெரியாது?
கடவுள் வழிபாட்டிலும்...
கடவூர் வட்டம் வீரணம்பட்டியில் ஆதிதிரா விடர் மக்களும், பிற்படுத்தப்பட்டசமூகமும் நான்கு தலைமுறையாக பகவதி அம்மன், காளி அம்மன் கோவில் திருவிழாவை இணை ந்து நடத்தி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கரகம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காவல் நிலையம் வரை இரு சமூகத்தினரும் சென்றனர். அதன் பிறகு ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் நடத்தி வரும் மளிகைக் கடை, டீக்கடைகளில் இனிமேல் பட்டியலின மக்களுக்கு எந்தப் பொருளும் வழங்கக் கூடாது என்று முடிவெடுத்துள்ளனர். மேலும் ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை மறுத்து, தனியாக கும்பாபிஷேகம் நடத்த முயற்சித்துள்ளனர். அப்போது, பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தி ற்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலு க்கு மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டு பல மாதங்களுக்கு பிறகே, பட்டியலின மக்க ளுக்கு வழிபாட்டு உரிமை கிடைத்தது.
பள்ளிக் குழந்தைகளிடம் தீண்டாமை!
சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சா குளம் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சாதியினர், பட்டியல் சாதியினரிடம் வழக்கு களை திரும்பப் பெறக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பட்டியல் சாதியினர் இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, பட்டியல் சாதி யினருக்கு தங்கள் கடைகளில் எந்தப் பொரு ளும் கொடுக்கக் கூடாது என பிற்பட்ட சமூகத்தி னர் ஊர் தீர்மானம் செய்ததாகக் கூறப் படுகிறது. இதன் அடிப்படையில் பள்ளிக் குழந் தைகள் கடைகளில் தின்பண்டம் கேட்டதற்கு தர மறுத்து ஊர்க் கட்டுப்பாடு என்ற தீண்டா மையை பள்ளி குழந்தைகள் மீது ஏவி தனது சாதி ஆதிக்க திமிரை காட்டியுள்ளனர். அந்த வீடியோவை வெளியிட்டு சுயசாதி பெருமை பேசுகின்றனர்.
மாட்டுக்கறிக்கும் ஊர்கட்டுப்பாடா?
மாட்டுக்கறியை பயன்படுத்தி சாதி ஆதிக்க சமுதாயத்தினர் தொடர்ச்சியாக சாதியின் பெய ரால் மதத்தின் பெயரால் மக்களிடையே கல வரங்களைத் தூண்டி வருகிறார்கள். சமீபத்தில் கோவை உடையாம்பாளையத்தில் பீப் பிரி யாணி சமைத்து தள்ளு வண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த தம்பதிக்கு பாஜக பிரமுக ரான சுப்பிரமணியன் என்பவர் மிரட்டல் விடுத்து இங்கு ஊர்க் கட்டுப்பாடு உள்ளது; மாட்டு இறைச்சி விற்கக்கூடாது என மிரட்டி உள்ளார். அரசியலமைப்புச் சட்டப்படி உணவு என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை; அதை விற்பதும் அவர்களின் உரிமை. ஆனால் ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் உணவின் மூலமும் தீண்டாமையை செயல்படுத்துகிறார்கள்.
ஊர்க் கட்டுப்பாட்டின் பலியாட்கள்
ஊர்க் கட்டுப்பாட்டின் பலியாட்கள் எல்லாம், உழைத்து உலகை உருவாக்கிய உழைப்பாளி மக்கள் மட்டுமே. வர்ணாசிரமத்தைத் தான் ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் சாதி ஆதிக்க சக்திகள் காலங்காலமாக பின்பற்றி ஏழை, எளிய, விவசாய, கூலித் தொழிலாளிகள் மீது தங்கள் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்து கிறார்கள். குடும்ப கௌரவம் என்று கூறி சாதி யின் பெயரால் கொலைகளை செய்வது போல ஊர்க் கட்டுப்பாடு என்று கூறி சாதிய ஆதிக்கத்தையும் நிலைநாட்டுகிறார்கள். ஆனால் ஆட்சியாளர்களால் இத்தகைய ஊர்க்கட்டுப்பாடுகளை உடைத்து நொறுக்க முடியவில்லை என்பது கவலைக்குரியது. திமுக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக லாம் என்ற சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்து இருந்த முள்ளை எடுத்து விட்டதாகக் கூறுகிறது. ஆனால், இன்ன மும் ஊர்க் கட்டுப்பாடு என்ற தீண்டாமை முள் பெரியார் நெஞ்சை மட்டுமல்ல தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின், நெஞ்சில் முள்ளாய் குத்திக் கொண்டுதான் இருக்கிறது.
அரசின் கடமை
அரசமைப்புச் சட்ட ஆட்சிக் காலத்தில், வரு ணாச்சிரம சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்த உருவாக்கப்பட்ட ஊர்க் கட்டுப்பாடு என்ற போலி பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிய தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு எந்தெந்த வகையில் ஊர்க் கட்டுப்பாடு என்ற தீண்டா மை உள்ளதோ அதனை முறியடிக்க வேண்டும். ஊர்க் கட்டுப்பாட்டின் மூலம் மக்களை அடக்கி, ஒடுக்கும் ஆதிக்க சக்திகளை, சாதி ஆண வத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். ஊர்க் கட்டுப்பாடு என்பது சாதி ஆதிக்க சக்திகள் மக்களை ஒடுக்குவதற்கு பயன்படுத் தும் ஆயுதம் என்பதை அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு எடுத்துரைக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.