articles

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிபந்தனையின்றி அமல்படுத்துக! -

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது

இந்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை, 24-1-2025 அன்று அறிவித்துள்ள குறை பாடுகள் நிறைந்த ஒருங்கிணைந்த ஓய்வூதி யத் திட்டத்திற்கு (Unified Pension Scheme - UPS) இந்திய தொழிற்சங்க மையம் (CITU) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்தவித நிபந்தனையுமின்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு பொதுச்செயலாளர் தபன் சென் விரிவான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘உறுதியளிக்கப்பட்ட  தொகையான’ ஓய்வூதியம்

ஒன்றிய நிதியமைச்சக அறிவிப்பின்படி, ஒருங்கி ணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆனது, தேசிய  ஓய்வூதிய அமைப்பின் கீழ் ஒரு விருப்பத் தேர்வாக 1-4-2025 முதல் அமலுக்கு வரவுள்ளது. 2024 ஆகஸ்டில் ஒன்றிய அமைச்சரவை முடிவாக இந்த ‘ஒருங்கி ணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS)’ அறிவிக்கப்பட்ட போது பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் இப்போது வெளியான உண்மை என்ன வென்றால், இது ஓய்வூதியம் என்று கூட அழைக்கப் படவில்லை - மாறாக ‘உறுதியளிக்கப்பட்ட தொகை’  அல்லது ‘குடும்பத் தொகை’ என்றே குறிப்பிடப்படு கிறது. இது பல வகைகளில் ஒரு ஏமாற்றுத் திட்டமா கவே அமைந்துள்ளது. இது நிதி அடிப்படையிலான ஓய்வூதிய முறையா கும். ஊழியர் மற்றும் முதலாளி பங்களிப்புகளின் தொடர்ச்சியான மற்றும் சரியான நேர சேகரிப்பு மற்றும் முதலீட்டை நம்பியுள்ளது. 

ஏமாற்றுத் திட்டத்திற்கு  ஏராளமான நிபந்தனைகள்

ஊழியரின் அடிப்படை ஊதியம் + அக விலைப்படியில் 10 சதவிகிதம் பங்களிப்பு செய்ய வேண்டும். அரசாங்கமும் அதே 10 சதவிகிதம் பங்க ளிப்பு செய்கிறது. இரண்டும் இயல்புநிலை முதலீட்டுத் திட்டத்தில் அல்லது ஊழியரின் விருப்பப்படி முதலீடு செய்யப்படும். பங்களிப்புகளும் வருமானமும் சேர்ந்து தனிநபர் தொகை (IC) என அழைக்கப்படும். அர சாங்கம் கூடுதலாக அடிப்படை ஊதியம் + அக விலைப்படியில் 8.5 சதவிகிதம் பங்களிப்பு செய்யும். இது அரசாங்கத்தின் விருப்பப்படி முதலீடு செய் யப்படும். இந்த பங்களிப்பும் அதன் வருமானமும் சேர்ந்து பொதுத் தொகை (PC) என அழைக்கப்படும். திட்டத்தின் முழு பலனையும் பெற, ஊழியர் தனது முழு தனிநபர் தொகையையும் பொதுத் தொகைக்கு மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். பணிக்காலத்தில் ஊழியர், பகுதி பணத்தை எடுத்திருந்தால், முழு பலனைப் பெற கூடுதல் பங்களிப்பு செய்ய வேண்டி யிருக்கும். 2024 ஆகஸ்டில் ஒன்றிய அமைச்சரவை முடிவுக்குப் பிறகு செய்யப்பட்ட ஆரம்ப அறிவிப்பில், ஊழியர்கள் 60 சதவிகிதம் வரை திரும்பப் பெற்று விகிதாச்சார குறை வான ஓய்வூதியம் பெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இது மற்றொரு ஜும்லாவாக மாறியுள்ளது, ஏனெனில் 24-1-2025 தேதியிட்ட இறுதி அறிவிப்பில் இது குறிப்பிடப்படவில்லை.

ஊழியரின் சேமிப்பை  வைத்தே ஓய்வூதியமா?

ஊழியர் பகுதி பணத்தை எடுத்தால் அல்லது அவரது பங்களிப்பு அல்லது முதலாளி பங்களிப்பு சில காலம் செய்யப்படவில்லை என்றால், தனிநபர் தொகை குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஊழியர் பணம் எடுக்காமலோ அல்லது அவரோ முத லாளியோ முழுமையாக பங்களிப்பு செய்திருந்தாலோ எவ்வளவு தனிநபர் தொகை இருந்திருக்கும் என் பதை ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மேம் பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority - PFRDA) கணக்கிட்டு அதை அடிப்படை பங்களிப்பு (BC) என அழைக்கும். ஓய்வுபெற்ற அல்லது தண்டனையாக கட்டாய ஓய்வு பெற்ற ஊழியர்கள், திட்டமிடப்பட்ட ஓய்வு தேதி முதல் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். தன்னிச் சையாக ஓய்வுபெற விரும்பும் ஊழியர் 25 ஆண்டுகள் தகுதிகர சேவைக்குப் பிறகே தேர்வு செய்ய முடியும். ஆனால் அவர் ஓய்வு பெறும் தேதி முதலே உறுதிய ளிக்கப்பட்ட தொகைக்கு தகுதி பெறுவார். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்ட வர்கள் அல்லது ராஜினாமா செய்தவர்கள் உறுதிய ளிக்கப்பட்ட தொகைக்கு தகுதியற்றவர்கள். அவர்க ளின் தனிநபர் தொகை என்னவாகும் என்பதும் குறிப்பி டப்படவில்லை.

ரூ. 10 ஆயிரத்திற்கும் உத்தரவாதமில்லை

10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவை உள்ள வர்கள் உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு தகுதியற்ற வர்கள். அவர்களின் தனிநபர் தொகை பற்றி எந்த குறிப்பும் இல்லை. கடைசி 12 மாத சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவிகிதம் பெற ஊழியர் 25 ஆண்டு கள் தகுதிகர சேவை பெற்றிருக்க வேண்டும். ஒருவர் அதிக சேவை செய்திருந்தாலும், கணக்கீட்டிற்கு 25 ஆண்டுகள் அல்லது 300 மாதங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். தகுதிகர சேவைக்கு கீழ் உள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகை விகி தாச்சாரமாக குறைக்கப்படும். ஊழியரின் தனிநபர் தொகை அடிப்படை தொகையை விட குறைவாக இருந்தால், உறுதியளிக்கப்பட்ட தொகை மேலும் விகி தாச்சாரமாக குறைக்கப்படும். ஓய்வுபெறும்போது ஊழியர் அடிப்படை தொகையை மாற்றினால் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரமாக இருக்கும். தனிநபர் தொகை அடிப்படைத் தொகையை விட குறைவாக இருந்தால் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 10 ஆயி ரத்திற்கும் குறைவாக இருக்கும். இதன் பொருள் என்னவென்றால், திட்டம் அறிவிக்கப்பட்டபோது கூறப்பட்டபடி ரூ. 10 ஆயிரம் குறைந்தபட்ச ஓய்வூதியம் என்ற உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.

தெளிவற்ற அறிவிப்புகள் ; பாதிக்கப்படும் ஊழியர்கள்

குடும்பத் தொகை உறுதியளிக்கப்பட்ட தொகை யில் 60 சதவிகிதமாக இருக்கும். குறைந்தபட்ச தொகை ரூ. 10 ஆயிரம் குடும்ப பாதுகாப்பு தொகைக்கு பொருந் தாது. அகவிலை நிவாரணம் பணியில் உள்ள ஊழி யர்களுக்கு பொருந்தும் அகவிலைப்படி விதத்திலேயே கணக்கிடப்படும். ஆனால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்ட தொகைகளுக்கு அதே விகிதங்கள் பொருந்தும் என்பதை அறிவிப்பு தெளிவுபடுத்தவில்லை. உறுதியளிக்கப்பட்ட தொகையானது, ஊழியர் மொத்த தனிநபர் தொகையை பொது தொகைக்கு மாற்ற அனுமதித்தால் மட்டுமே கிடைக்கும் என்ப தால், ஒவ்வொரு 6 மாத தகுதிகர சேவைக்கும் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவிகிதம் ஒரு முறை  தொகையாக வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் குறைவான தகுதிகர சேவை உள்ளவர்கள் ஒரு முறை தொகைக்கு தகுதியற்றவர்கள். ஊதியத்தில் 50 சதவிகிதம் வழங்கப்படாது தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (National Pension System-NPS) கீழ் ஓய்வு பெற்றவர்களும் ஒருங்கி ணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS)தகுதியு டையவர்கள். அவர்களுக்கு எடுத்த தொகைகள் மற்றும் வருடாந்திர தொகைகளை சரிசெய்து நிலுவைத் தொகை வழங்கப்படும். அத்தகைய ஓய்வூதியர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் தொகையை PFRDA முடிவு செய்யும். திட்டத்தை செயல்படுத்த PFRDA விதிமுறைகளை வெளியிடும். அறிவிப்பின்படி, 100 சதவிகிதம் தனிநபர் தொகை யை அரசு எடுத்துக் கொள்ளும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவைக்குக் கூட கடைசி மாத ஊதி யத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியம் இல்லை. குறைவான சேவைக் காலத்திற்கும் அரசுக்கு குறைவான தொகை மாற்றத்திற்கும் உறுதியளிக்கப்பட்ட தொகை விகி தாச்சாரமாக குறைக்கப்படும். 

வஞ்சிக்கப்படும் ஓய்வூதியர்கள்

அறிவிப்பின்படி, 100 சதவிகிதம் தனிநபர் தொகையை அரசு எடுத்துக் கொள்ளும், குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சேவைக்கு கூட கடைசி மாத ஊதி யத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியம் இல்லை. குறை வான சேவைக் காலத்திற்கும் அரசுக்கு குறைவான தொகை மாற்றத்திற்கும் உறுதியளிக்கப்பட்ட தொகை விகிதாச்சாரமாக குறைக்கப்படும். அடிப்படை தொகை அரசுக்கு மாற்றப்படாத போது ரூ. 10 ஆயிரம் குறைந்த பட்ச தொகை உத்தரவாதம் பொருந்தாது, குடும்பத் தொகைக்கும் மத்திய அகவிலை நிவாரணம் உறுதி யில்லை. கொடுப்பனவு இல்லை, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் இல்லை, ஊதிய ஆணையங்களுக்குப் பிறகு ஓய்வூதிய மாற்றம் இல்லை, குடும்ப ஓய்வூதியம் துணைவர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ‘உறுதியளிக்கப்பட்ட தொகை’ என்ற இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 2024 ஆகஸ்டில் பிரச்சாரம் செய்யப்பட்டபடி எதுவும் “உறுதி அளிக்கப்படவில்லை”.  இந்நிலையில், 2025 ஜனவரி 24 அறிவிப்பு நூற்றுக் கணக்கான ‘ஆனால்’ மற்றும் ‘ஆகிலும்’-களை” கொண்டுள்ளது, இது ஊழியர்களை மேலும் கசக்கிப் பிழிவதற்கும் ஏமாற்றுவதற்குமானது.

உரிமைப் பறிப்புக்கு எதிராக  உறுதியுடன் போராடுவோம்!

எனவே யுபிஎஸ் என கூறப்படும் இந்த அறிவிப்பு, ஊழியர்களின் சட்டப்பூர்வமான மற்றும் நிலைநாட்டப் பட்ட ஓய்வூதிய உரிமையை பறிக்கும் மோடி தலைமை யிலான அரசின் ஏமாற்று முயற்சியின் மாதிரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் செய்தது போல பேச்சுக்கும் செயலுக்கும் வேறுபாடு காட்டும் இயல்புக்கு உண்மையாக இருக்கிறது.  எனவே, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதுடன், பழைய ஓய்வூ திய திட்டத்தை நிபந்தனையின்றி கொண்டுவர சிஐடியு வலியுறுத்துகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட குறைவான பலன்களை அளிக்கும் எந்தவொரு திட்டத் திற்கு எதிராகவும் ஊழியர்கள் நடத்திவரும் போராட் டங்களுக்கு சிஐடியுவின் உறுதியான ஆதரவு தொடரும். இவ்வாறு தபன் சென் குறிப்பிட்டுள்ளார்.