states

மருத்துவ மாணவர்க்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழக அரசு சீராய்வுக்குச் செல்லும்!

சென்னை, ஜன. 30 - “முதுநிலை மருத்துவப் படிப்பு களில் அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் வந்திடாத நிலையில்,  சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோ சித்து மிக விரைவில் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான (மாநிலங்களுக் கான) ஒதுக்கீடுகள் எதுவும் கூடாது; இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக் கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மருத்துவ முதுநிலை மாண வர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், தமி ழக மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை யில் வியாழனன்று (ஜன.30) செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப் போது அவர் கூறியிருப்பதாவது: “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், அரசு மருத்துவர்களுக்கு பாதிப்பு.  அவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் தந்துகொண்டிரு க்கும் உரிமைகள் முழுமையாக பாதிக்கப்படும்.

அதேபோல், தமி ழகத்தில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறு வனங்களும் இந்த தீர்ப்பால் முழு மையாக பாதிக்கப்படும். ஒட்டு மொத்தமாக 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மருத்துவ மேற்படிப்புகளில் கிட்டத்தட்ட 2,200-க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழக அரசின் வசம் இருக்கிறது. 1,200 முதுநிலை மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது. இந்த இடங் களைப் பறித்து மற்றவர்களுக்கு தர வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுகிற சூழ்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வழக்கில் இதுபோன்றதொரு சோதனை வந்தது. அப்போது தமிழக முதல்வர் வழக்கு தொடர்ந்து 2022-இல் நமக்கு சாதகமான ஒரு தீர்ப்பு வந்தது. அதன்மூலம் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் உரிமைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது வந்துள்ள தீர்ப்பிலும், தமிழக அரசு முது நிலை மருத்துவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல், சீர் செய்வ தற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் வந்திருக்கிறது. தீர்ப்பானது, இந்த ஆண்டு சேர்க்கைக்கு இது பொருந்தாது என்று கூறியுள்ளனர். அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆனதுதான் இந்த தீர்ப்பு.  அதற்குள் சீராய்வு மனு தாக்கல் செய்து அடுத்த ஆண்டில் பாதிப்பு  ஏற்படாத வகையில் பாதுகாப்ப தற்கான நடவடிக்கைகள் சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி செய்யப்படும். காலம் காலமாக சமூக நீதியை யும், இடஒதுக்கீடு உரிமையையும் தமிழகம் நிலைநிறுத்தி வருகிறது. இதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.