states

img

புர்கினா பாசோ, மாலி, நைஜர் நாடுகள் பிரான்ஸ் ஆதிக்கத்திற்கு எதிராக முடிவு

ஓவாகடூகோ சாஹேல் கூட்டணி (AES) நாடுகளான புர்கினா பாசோ, மாலி, நைஜர் ஆகிய நாடுகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பில் (ECOWAS) இருந்து விலகுவதாக அறிவித்தன. இந்த நாடுகளைச் சேர்ந்த வெளியுற வுத் துறை அமைச்சர்கள் புர்கினா  பாசோவின்  தலைநகர் ஓவாகடூகோ வில் ஒரு கூட்டம் நடத்தி அதன் முடி வாக இந்த அதிரடி அறிவிப்பை வெளி யிட்டுள்ளனர்.  கடந்த ஆண்டு இந்த நாடுகளின் கூட்டமைப்பு இந்த பொருளாதாரக் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தது. அதன் பிறகு தற்போது ஜனவரி 28 அன்று விலகல் அறிவிப்பை பகிரங்கமாக அறிவித்துள்ளது குறிப்பி டத்தக்கது.  மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொ ருளாதாரக் கூட்டமைப்பு, அப்பிராந்தி யத்தில் உள்ள மிக வலுவான பொருளா தார கூட்டமைப்பாகும். ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கூட்டமைப்பு ஆப்பிரிக்க நாடுகள் மீதான பிரான்ஸ், இங்கிலாந்து, அமெ ரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் சுரண்டலுக்கு எதிரான நடவடிக்கை க்கு எதிரான வலுவான நடவடிக்கை யை எடுக்க மறுக்கிறது என பல ஆண்டு களாக குற்றச்சாட்டு உள்ளது. சாஹேல் நாடுகளின் இந்த அறி விப்பை தொடர்ந்து அந்நாட்டு தலை நகரில் ஆயிரக்கணக்கான மக்கள்  கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். இந்த முடிவு சாஹேல் நாடு களின் இறையாண்மை, ஏகாதி பத்திய எதிர்ப்பு, பிராந்திய ஒத்துழைப் புக்கான உறுதித்தன்மை ஆகிய வற்றை வெளிப்படுத்தும் நடவடிக்கை என கூறப்படுகின்றது.  பொருளாதாரக் கூட்டணியில் இருந்து விலகும் இந்நாடுகளின் முடிவா னது ஆப்பிரிக்க கண்டத்தின் புவிசார் அரசியலில் மிக முக்கியமான மாற்றம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக இந்த மூன்று நாடுகளும் பிரான்ஸ்  ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவ தற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள் ளன. பிரான்ஸ் ஆதரவு ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு ஏகாதிபத்திய எதிர்ப்புடன் இந்நாடுகளில் ராணுவ ஆட்சி நடந்து வருகின்றது.   பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக 2023 இல் இந்த நாடுகள் இணைந்து  சாஹேல் கூட்டணியை உருவாக் கின. மேலும் வெளிப்புற ஆதிக் கத்தை எதிர்ப்பதற்காகவும் ராணுவ ஆட்சிக்கு எதிராக உருவாகும் ராணு வக்கிளர்ச்சியை கட்டுப்படுத்தவும் இவை ஒரு புதிய ராணுவ கூட்டணி யையும் உருவாக்கியுள்ளன. பல ஆண்டுகளாக அப்பிராந்தி யத்தில் மேற்கு நாடுகளால் உருவாக்கப் பட்டுள்ள பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட 5,000 வீரர்கள்  கொண்ட கூட்டு ராணுவப் படையை உருவாக்கவும் சாஹேல் கூட்டமைப்பு நாடுகள் திட்டமிட்டுள்ளன.

ஒரு புதிய சகாப்தம்

சர்வதேச அரசியல் நடவடிக்கை களை கவனித்து வரும் ஆய்வாளர்கள் சிலர் சாஹேல் நாடுகளின் இந்த முடி வானது, மேற்கு ஆப்பிரிக்கா பிராந்தி யத்தின் பொருளாதாரம் மற்றும் அரசி யல் பாதையில்  நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஏகாதிபத்தியம் மற்றும் மேற்கு நாடுகள், ஆப்பிரிக்கா நாடுகளின் மீது திணிக்கும் நவீன தாராளமய பொருளாதாரத்தை  நிராக ரிப்பதன் வெளிப்பாடு என குறிப்பி டுகின்றனர். மேலும் இந்நாடுகள்  உருவாக்கி யுள்ள புதிய கூட்டணி, அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிக்கும், அவற்றின் சர்வதேச அரசியல் பொருளாதார பாதையை மாற்று திசையில் பயணிக்க வைக்கும் என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.