திரிபுராவில் சிபிஎம் எழுச்சியைப் பறைசாற்றிய மாநில மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில 24-ஆவது மாநாட்டையொட்டி, தலைநகர் அகர்தலாவில் மாபெரும் செங்கொடிப் பேரணி நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான தோழர்கள், உயர்த்திப் பிடித்த செங்கொடியுடனும், உணர்ச்சிகரமான முழக்கங்களை எழுப்பியும் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். பாசிச பாணி ஆட்சி நடத்தும் பாஜக-வின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம் என்பதை உணர்த்தும் வகையிலும், மீண்டும் இடதுசாரிகள் ஆட்சிக்கு திரிபுரா தயாராகி விட்டது என்பதை பறைசாற்றும் வகையிலும் அமைந்த இந்த பேரணியால் அகர்தலா நகரமே செம்மயமானது.