states

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது நாளை ஒன்றிய பட்ஜெட்

புதுதில்லி, ஜன. 30 - 2025-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இரண்டு கட்டங் களாக நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், முதற்கட்ட கூட்டத் தொடர், வெள்ளிக்கிழமை (ஜன.31) அன்று துவங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ப தால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில், காலை 11 மணிக்கு குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்று கிறார்.  அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1 அன்று  ஒன்றிய அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற் கான பட்ஜெட் எனப்படும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-ஆவது முறை யாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, குடி யரசுத் தலைவரின் உரை மீது நன்றி  தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிப்ர வரி 3 முதல் 6-ஆம் தேதி வரை, நாடாளு மன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது.  பிப்ரவரி 13-ஆம் தேதியுடன் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவடைகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு  மார்ச் 10 தொடங்கி ஏப்ரல் 4 வரை நடை பெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் வக்பு வாரிய  திருத்த மசோதா, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’  மசோதா உள்ளிட்ட 62 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப இந்தியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முன்னதாக பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து,  வியாழனன்று அனைத்துக் கட்சிக் கூட்டத் திற்கு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு விடுத்தி ருந்தார். அதன்படி ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ, ஜெ.பி. நட்டா, அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் எல். முருகன் ஆகியோரின் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், காங்கிரஸ், இடதுசாரி கள், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.