tamilnadu

img

நூறுநாள் வேலைத்திட்ட நிதியை ரூ. 4 லட்சம் கோடியாக உயர்த்துக!

சென்னை, ஜன. 30 - நூறு நாள் வேலைத்திட்ட ஊதியப் பாக்கி ரூ. 1,635 கோடியை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்; அத்துடன், சனிக்கிழமை யன்று தாக்கல் செய்யப்படவுள்ள ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை யில், ஊரக நூறுநாள் வேலையுறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 4 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று  வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் கள் தமிழகம் முழுவதும் 150 இடங் களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மகாத்மா காந்தி நினைவு நாளில்  (ஜனவரி 30), அவரது பெயரிலான ஊரக வேலையுறுதித் திட்டத்தைப் பாதுகாப்போம்; ஊரகத் தொழி லாளர்களின் உரிமையை மீட்போம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டங்களில், 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கை களை முழங்கினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதியளிப்புத் திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2014-இல் அதி காரத்திற்கு வந்த ஒன்றிய பாஜக அரசா னது, 10 ஆண்டுகளாகவே திட்டத்திற் கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கி வருகிறது.  25 கோடி பேருக்கு நாடு முழுவதும் வேலை அட்டை வழங்கப்பட்டி ருந்த போதிலும், ‘ஆதார் இணைக்க வில்லை’; ‘செயல்படாத வேலை அட்டைகள்’ என்ற காரணங்களை கூறி 14.50 கோடி பேர்களாக பயனாளி களின் எண்ணிக்கையை குறைத்தது. மீண்டும் 5 கோடி வேலை அட்டை களை நீக்கி 9.50 வேலை அட்டை களை மட்டுமே செயல்பாட்டில் வைத்துள் ளது. இதில், ஏறக்குறைய 10 சதவிகி தமான வேலை அட்டைகளுக்கு மட்டுமே ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. 90 சத விகிதமான வேலை அட்டைகளுக்கு 20-40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. கிராமப்புற இந்தியாவில் விவசா யம் முற்றிலும் இயந்திரமயமாக்கப் பட்டுள்ள சூழ்நிலையில் போதிய வேலையும் வருமானமும் இன்றி 25 கோடி விவசாயக் கூலித் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகளால், சிறு-குறு நிறு வனங்கள் ஆயிரக்கணக்கில் மூடப் பட்டுள்ளதால், நகர்ப்புறங்களில் கிடைத்துவந்த வேலைவாய்ப்பும் பறிபோய் உள்ளது.  

இந்நிலையில் ஊரக வேலைத் திட்டத்தை பலப்படுத்துவதற்குப் பதி லாக, ஒன்றிய அரசு முன்பைவிட மோசமாக நிதி ஒதுக்கீடு குறைப்பு, இயந்திரங்களை பயன்படுத்தும் வகை யில் விதிகளை தளர்த்தி கிடைத்து வரும் அற்ப சொற்ப வேலைகளையும் ஒப்பந்ததாரர்களுக்கு மடை திறந்து விட்டுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாட்டில் பத்து மாதங்களைக் கடந்தும் இதுவரை 20 முதல் 30 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் ஊதியத்தையும், மிகக் காலதாமத மாக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கிறது. நவம்பர் 27 வரை வேலைசெய்து மூன்று மாதங்களைக் கடந்தும், இதுவரை வழங்க வேண்டிய ரூ. 1,635 கோடி சம்பள பாக்கியை வழங்கவில்லை. இந்த இடைப்பட்ட காலங்களில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் வந்து சென்றுள்ளன. பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களை பிதற்றிக் கொள்ளும் பாஜகவினர், அந்த  பெரும்பான்மை மக்களை, விழாக் காலங் களில் கூட கையில் காசு இல்லாமல் விழிபிதுங்கி நிற்க வேண்டிய அவலத்திற்கு தள்ளியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் வி.பி. நாகை மாலி, சம்பளப் பாக்கியைக் கேட்டு, ஜனவரி  12 அன்று சட்டமன்றத்தில் வலியுறுத்தி யதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் பிர தமருக்கு கடிதம் எழுதினார். தமிழ்நாடு  நிதி யமைச்சர் ஒன்றிய அரசின் நிதியமைச்சரைச் சந்தித்தார். இவ்வாறு தமிழகத்தின் சார்பில் தொடர்ச்சியான தலையீட்டை செய்தபோதி லும் ஒன்றிய பாஜக அரசு வேலைசெய்து சம்பளப்பாக்கிக்காக காத்திருக்கும் தொழி லாளர்களிடம் ஈவிரக்கமற்ற முறையில் நடந்து வருகிறது. எனவே, ஒன்றிய அரசின் இந்த அராஜக  நடவடிக்கைகளை கண்டித்தும், உடனடி யாக சம்பளப் பாக்கியை விடுவிக்க வேண்டும், 100 நாட்களும் வேலையை முழு மையாக வழங்க வேண்டும், வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலி யை 600 ரூபாயாகவும் உயர்த்திட வேண்டும், 2025-26 நிதிநிலை அறிக்கையில் ஊரக வேலைத் திட்டத்திற்கு நான்கு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், 150-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வியாழனன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், 30,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தேனி மாவட்டம் சின்னமனூரில், சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர்  ஏ. லாசர், திருவாரூர் மாவட்டம் குடவாச லில் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ, நாகப்பட்டினம் மாவட்டம் தலை ஞாயிறில் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், திருச்சி மாவட்டம் திரு வெறும்பூரில் பொருளாளர் அ. பழனிச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.